எவ்வாறு குப்பையை பெட்ரோலியமாக மாற்றுவது ?

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

ட்ரேஸி ஸ்டேட்டேர்


கச்சா பெட்ரோலியத்தை உருவாக்கும் செய்முறை மிகவும் எளிது. பழைய தாவரங்கள், ஜெல்லி மீன், டைனஸோர் ஆகியவைகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அவற்றை ஒரு பள்ளம் தோண்டி மூட வேண்டும். மிகவும் ஆழத்தில் மூடி பல கோடி வருடங்கள் அழுத்தத்தில் வைத்திருந்தால் கச்சா பெட்ரோலியம் தயார்.

அல்லது, சேஞ்சிங் ஓர்ல்ட் டெக்னாலஜிஸ் கண்டுபிடித்த முறையை பயன்படுத்தி கோழி உடலுறுப்புகள் ஆகிவற்றை ஒரு வெப்ப முறையின் உள்ளே அனுப்பியும் பெட்ரோலியத்தைப் பண்ணலாம். இந்த முறை தண்ணீர், அழுத்தம், மற்றும் வெப்பத்தை கொண்டு, உயிரியல் பொருட்களை சுத்தமான எரிபொருளாகவும், கரியாகவும், கனிமப் பொருட்களாகவும், கச்சா பெட்ரோலியம் எண்ணெயாகவும் மாற்றுகிறது. இந்த கச்சா பெட்ரோலியத்தை சாதாரண எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்குள் செலுத்தி வழக்கம்போல மற்ற உபரி எண்ணெய்களாக மாற்றலாம். இந்த முறை பெட்ரோலியம் பண்ணுவதில் உபரி உற்பத்திப் பொருள் வெறும் தண்ணீர் மட்டுமே.

ஏப்ரல் 2003இல் , முதல் வியாபார ரீதியிலான தெர்மோ பாலிமரைசேஷன் தொழிற்சாலை கார்தாஜ் நகரில் தொடங்கப்பட்டுள்ளது. தினம்தோறும், வான்கோழி கறி சமைக்கும் கோனாக்ரா பட்டர்பால் வான்கோழி தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் சுமார் 200 டன் உபயோகப்படுத்தப்படாத வான்கோழி பாகங்களை இந்த தொழிற்சாலை உபயோகப்படுத்துகிறது. இந்த வான்கோழி கழிவு பாகங்கள் பெரும்பாலும் கால்நடைத் தீவனமாக ஆக்கப்பட்டுவந்தது. ஆனால், இந்தமாதிரி விலங்குப் பொருட்களிலிருந்து கால்நடைத் தீவனம் செய்வது அமெரிக்காவிலும் தடை செய்யப்படலாம். ஏற்கெனவே மாட்டு பைத்திய வியாதி காரணமாகவும், ஹூஃப் மவுத் வியாதி காரணமாகவும், பிரிட்டன் இதனை தடை செய்துவிட்டது. இந்த மேட்கவ் என்னும் மாட்டு பைத்திய வியாதி இதுபோன்ற விலங்குப் பொருட்களை மாடுகளுக்கு மாட்டுத்தீவனமாகக் கொடுப்பதால் வருகிறது என்று கூறப்படுகிறது.

1960இலிருந்தே இந்த முறை தாவர விலங்குப் பொருட்களை ஹைட்ரோ கார்பன் திரவங்களாக மாற்றும் முறையாக கண்டுபிடிக்கப்பட்டு அறியப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இந்த முறை அவ்வளவாக உபயோகமில்லாதது. ஏனெனில் இந்த பழைய முறையில் ஒரே ஒரு பாத்திரமே தாவர விலங்குப்பொருட்களை சூடாக்கவும், அவற்றை எண்ணெயாக மாற்றவும் உபயோகப்படுத்தப்பட்டது என்று இந்த நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.

இது சீரான வெப்பத்தை உருவாக்குவதில்லை. சீரான வெப்பம் இருந்தாலே மூலக்கூறுகளை உடைத்து கச்சா எண்ணெய் உருவாக்க முடியும். இந்த நிறுவனம், இரண்டு பாத்திரங்கள் மூலம், சீரான அளவில் வெப்பத்தை செலுத்தவும், அழுத்தத்தை செலுத்தவும் செய்கிறது. இந்த அமைப்பு வெறும் வான்கோழி பொருட்களை மட்டுமல்ல, பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், முனிஸிபல் குப்பை, பேப்பர், கால்நடை விலங்கு மிச்சமீதாரிகள் ஆகியவற்றையும் எண்ணெயாக மாற்றவல்லது.

நிச்சயம் இயற்கை இந்த பொருட்களை உபயோகமான எரிபொருளாக மாற்றவல்லது. ஆனால், அதற்கு சற்று அதிக நேரம் பிடிக்கும்.

வழிமுறை படங்கள்

Series Navigation

ட்ரேஸி ஸ்டேட்டேர்

ட்ரேஸி ஸ்டேட்டேர்