டி வி லட்சுமி நாராயணன்
இந்தியா உலகின் உணவு உற்பத்தியில் முதலிடம் வசிக்கும் நாடுகளில் ஒன்று. 15 பில்லியன் டாலர் உணவுப் பொருளை வருடம் தோறும் வீணடிக்கும் நாடும் இந்தியா தான்.
உணவுப் பொருளைப் பதப்படுத்தும் தொழிலுக்கு உலக தொழில் முனைவர்களை இந்தியாவுக்கு இது தான் ஈர்த்தது.
உணவுப் பொருளைப் பாதுகாக்கும் முயற்சியும், உணவை வெகு காலம் சேமிக்கவைக்குமாறு பதப்படுத்தும் முயற்சியும் தான் உணவுப் பொருள் வீணாவதைத் தடுக்க முடியும். இந்த முயற்சிக்கு பெரும் முதலீடு தேவை. பாரம்பரிய உணவு வழக்கத்தை மாற்றி , இந்தியர்கள் புட்டியில் அடைக்கப் பட்ட உணவு வகைகளை பாவிக்கவும் பழக்கப் பட வேண்டும்.
உணவு பதப்படுத்தும் தொழில் இந்தியாவில் பெருமளவில் நடைபெறுகிறது. 70 பில்லியன் டாலர் மதிப்புக் கொண்டது.
ராஜீவ் காந்தி காலத்தில் இந்தத் தொழில் ஊக்கம் பெற்றது. இந்தத் தொழிலுக்கென்றே ஒரு அமைச்சரகமும் ஏற்பட்டது. பத்துவருடங்களுக்குப் பின் இன்று திரும்பிப் பார்த்தால் பெரிதும் சாதனைகள் இதில் நிகழவில்லை.
உணவுச் சேமிப்புத் தொழில் நுட்பம் சரியில்லாத காரணத்தால் 70,000 கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வருடந்தோறும் வீணாகிறது என்று டாக்டர் வி பிரகாஆ கூறுகிறார். இவர் மைசூர் மத்திய உணவுத் தொழில் நுட்பக் கல்லூரியில் பணி புரிகிறார்.
இந்தியாவின் மொத்த உற்பத்தியில் விவசாயப் பொருட்கள் 33 சதவீதம் மதிப்புள்ளவை. இருந்தும் அறுவடைக்குப் பின்பு உற்பத்தியில் 30-40 சதவீதம் விவசாயப் பொருட்கள் வீணாகின்றன.
பதப்படுத்திய உணவுப் பொருட்களுக்கு நகரங்களில் மட்டுமே விற்பனை சாத்தியம் இருப்பது ஒரு காரணம். இதனால், உணவைச் சேமிக்கும் கிடங்குகள் கிராமப் புறங்களில் இல்லை. விவசாயத் தொழிலில் காலாவதியாகிப் போன நடைமுறைகள் பின்பற்றப் படுகின்றன. சரியாக இவை மூட்டை கட்டப் பட்டு அனுப்பபப்டுவதில்லை. இதனால் பெருமளவில் உணவுப் பொருட்கள் வீணாகின்றன.
சமீபத்தில் நடந்த இந்திய விஞ்ஞான சம்மேளனத்தில் , உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் தொழில் நுட்பம், பதப்படுத்தும் தொழில் நுட்பம் இல்லாதது தான் வீணாவதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
தரத்திலும், சரியான முறையில் கட்டமைத்து சரக்கை அனுப்பாததாலும் தான் விவசாயப் பொருட்கள் வீணாகின்றன.
இன்று நடைமுறையில் உள்ள உச்சவரம்புச் சட்டங்களும் உற்பத்தி அதிகரிக்க உதவவில்லை. சிறு விவசாயிகள் அறுவடைக்குப் பின்பு சேமிக்கும் வசதியை மேற்கொள்ள அவர்களுக்குப் பணபலம் இல்லை.
மக்கின்சி அண்ட் கம்பெனியின் ஆலோசகர்கள் ‘இடைத்தரகர்களை நீக்குவதும், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு ஒரு மைய அமைப்பு ஏற்படுத்துவது வீணடிப்பைத் தவிர்க்க உதவும் ‘ என்று குறிப்பிட்டது.
உணவு பதப் படுத்தும் தொழிலுக்கு தாராளமயமாக்கல் உதவியுள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் வீணாவது தவிர்க்கப் படும் என்று நம்புகிறார்கள். இந்தியாவிற்குச் சாதகமான ஒரு விஷயம் என்னவென்றால் , வெப்ப தட்ப நிலை இந்தியா முழுதும் வெவ்வேறு விதமாய இருப்பதும், அதனால் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்க முடிவதும் தான். கச்சாப் பொருட்களும் மிகுதியாய்க் கிடைக்கின்றன. வெளிநாட்டு பிராண்டுகள் அனுமதிக்கப் பட்டுள்ளன. வரிகளும் குறைக்கப் பட்டுள்ளன.
பழமு காய்கறிகளும் தான் வீணாவதில் அதிகம். இந்தியா பழம் காய்கறிகள் உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடம் கொண்டிருந்தாலும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களில் இந்தியா முன்னணியில் இல்லை.
மக்கன்சி கம்பெனியின் குறிப்பின் படி, ஜாம், சாஸ் போன்ற பொருட்களைக் காட்டிலும் ஆட்டா, பிஸ்கட் போன்ற பிரபலமான பொருட்களில் தான் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.
அறுவடைக்குப் பின் ஏற்படும் வீணாதலைத் தவிர்க்க வேண்டும். கிட்டத்தட்ட 30-40 சதவீதம் மொத்த உற்பத்தியில் இப்படி வீணாகிறது. தொழில் நுட்பம் சரியான முறையில் பயன்படுத்தப் பட்டால், மாம்பழம் போன்ற உணவு பொருட்களை பாதிக்கும் நுண்ணியிர்கள் தவிர்த்து, வெகுகாலம் விற்பனைக்கு வைத்திருக்கலாம். மாறும் உணவுப் பழக்கங்களும் இந்தத் தொழிலை முன்னேற்றும் வரும் பத்தாண்டுகளில் 140 பில்லியன் அளவிற்கு பதப்படுத்தப் பட்ட உணவுத் தொழில் வளரும் . இதனால் உணவு வீணாவது பெருமளவு குறையும்.
- எங்கேயோ கேட்ட லொல்லு
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)
- அறிவியல் துளிகள்-12
- இந்த வார அறிவியல் செய்திகள்
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)
- காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்
- சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்
- தினகப்ஸா
- புதிய தானியம்
- புரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )
- கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)
- பைமடந்தை
- தூக்கம்
- மழை வரும் போது…
- அரபிய நாட்டினிலே..
- முடிந்த தொடக்கம்…
- ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை
- இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003
- சனநாயக நாடென்னும் போதினிலே….
- பதினோராம் அவதாரம்
- இளமை
- கலைமன்றம் வழங்கிய காணிக்கை
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- ஐரோப்பிய குறும்பட விழா
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்
- கடிதங்கள்
- என் தாய் பண்டரிபாய்
- இட்லி
- ‘படைத்தவனைத் தேடுகிறேன் ‘
- அமைதி
- இரண்டு கவிதைகள்
- சின்னவரே! சின்னவரே!
- இன்னொரு உயிர்…
- அவனுக்கென்று ஒரு வானம்…
- காத்திருப்பாயா…