பல இணையப்பக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்ட அறிவியல் செய்திகள்
***
சிறுத்தையை குலோன் செய்ய இந்திய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி
ஹைதராபாத்தில் இருக்கும் செண்டர் ஃபார் செல்லுலார் மாலுக்குயுலர் பயலாஜி நிறுவனம் ஈரானில் இருக்கும் இரண்டு சிறுத்தைகளின் உடலில் இருக்கும் செல்களை கேட்டிருக்கிறது. இந்த செல்களின் மூலம் குலோனிங் செய்து இயற்கையிலிருந்து அழிந்து போய்விட்ட இந்திய சிறுத்தைகளை மறுபடி உயிர்ப்பிக்க முனைகிறது இந்த நிறுவனம்.
ஈரானிய குடியரசுத்தலைவர் முகம்மது கடாமி இந்தியா வந்திருந்தபோது இந்த கோரிக்கை அவரிடம் வைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டதால் இந்திய சிறுத்தை இயற்கையிலிருந்து மறைந்துவிட்டது. ஆனால் இந்த இந்தியவகை சிறுத்தைகள் ஓரிரண்டு இன்னும் ஈரானின் சிலபகுதிகளில் காணக்கிடைக்கின்றன.
***
வானொலி அலைகள் (ரேடியோ அலைகள்) மூலம் கண் சிகித்சை
ஐந்து நிமிடமே எடுத்துக்கொள்ளும் எளிய சிகித்சை மூலம் கண் பார்வையை சரி செய்யும் ஒரு முறை இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ளது.
முதலில் கண் பாப்பாவை மரத்துப்போகச்செய்யும் மருந்து இடப்படுகிறது. அடுத்தது மயிரிழை போன்ற ஒரு ஊசிவழியாக மிகவும் குவிக்கப்பட்ட ரேடியோ அலைகள் கண்ணில் இருக்கு கோர்னியாவைச் சுற்றி 32 இடங்களில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் வெளிப்படும் வெப்பம் கண்ணில் இருக்கும் கோலோஜனை மிகசிறிய அளவு சுருக்குகிறது. இது கண்ணில் இருக்கும் லென்ஸை அமுக்கி அதன் பார்வையைச் சரி செய்கிறது. இது தூரப்பார்வையை வெகு எளிதில் சரி செய்ய உதவுகிறது.
இது எளிய முறையாக இருப்பதால், இங்கிலாந்தில் இதற்கு ஆதரவு பெருகி வருவதாக பிபிஸி தெரிவிக்கிறது
***
கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த போரினால் ஆஃப்கானிஸ்தானத்தின் சுற்றுச்சூழல் பேரழிவு நடந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது
இந்த போரின் விளைவால் காபூலுக்கு வரும் தண்ணீரில் பாதி கெட்டுப்போன தண்ணீர் என்று கூறுகிறது. குழந்தைகள் 12 மணி நேரம் வேலை செய்யவைக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் ஆபத்தான இயந்திரங்கள் மேலே தூங்குகிறார்கள் என்றும் கூறுகிறது.
கடந்த 25 வருடங்களில் ஆஃப்கானிஸ்தானத்தின் முக்கிய காடுகளில் பாதி அழிக்கப்பட்டுவிட்டன என்றும் இது கூறுகிறது.
நேரடியாக போரின் காரணத்தால், நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்றுவிட்டது என்றும், சதுப்பு நிலங்கள் காய்ந்து போய்விட்டன என்றும், காடுகள் அழிந்துவிட்டன என்றும், காட்டு விலங்குகள் காணாமல் போய்விட்டன என்றும் இது கூறுகிறது.
ஆஸ்பத்திரி கழிவுப்பொருட்கள் சரியான முறையில் அழிக்கப்படாமல் அங்கங்கு வீசி எறியப்பட்டதால், பல இடங்களும், ஏரிகளும், தெருக்களும் சுகாதாரமின்றி ஆகிவிட்டன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. நகர்ப்புற குடிநீர் தளங்களில் மருத்துவ சிரிஞ்சுகளும், மனித உடல் பாகங்களும், பாக்டாரியா அசுத்தங்களும், சாக்கடைநீரும் கலப்பதை இது தெரிவித்திருக்கிறது.
ஆஃப்கானிஸ்தானத்துக்கே உரிய சில விலங்குகள் முழுவதுமாக காணாமல் போய்விட்டன என்றும் இந்த அறிக்கை குறிப்பிடுகிறது
***
- எங்கேயோ கேட்ட லொல்லு
- அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய கெலென் ஸீபோர்க் [Glenn Seaborg] (1912-1999)
- அறிவியல் துளிகள்-12
- இந்த வார அறிவியல் செய்திகள்
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)
- புன்னகைக்கும் கதைசொல்லி — -அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து…. (முதல் பகுதி)
- காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்
- சொன்ன கதைகளில் சொல்ல மறந்த கதைகள்: தேவர் மகனும் தலித் மகளும்
- தினகப்ஸா
- புதிய தானியம்
- புரட்சித்தலைவரும் சூப்பர் ஸ்டாரும் கோவை சரளாவும் ( ஒப்பிட்டுப்பார்க்கும் ஒரு புதுமைத் தொடர் )
- கெட்ட வார்த்தைக் கிளி (உரை வெண்பா)
- பைமடந்தை
- தூக்கம்
- மழை வரும் போது…
- அரபிய நாட்டினிலே..
- முடிந்த தொடக்கம்…
- ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதை தொகுப்பின் கவிதைகள், முன்னுரை
- இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003
- சனநாயக நாடென்னும் போதினிலே….
- பதினோராம் அவதாரம்
- இளமை
- கலைமன்றம் வழங்கிய காணிக்கை
- இந்தியா 70,000 கோடி மதிப்பு உணவுப் பொருளை வீணடிக்கிறது
- ஐரோப்பிய குறும்பட விழா
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்
- கடிதங்கள்
- என் தாய் பண்டரிபாய்
- இட்லி
- ‘படைத்தவனைத் தேடுகிறேன் ‘
- அமைதி
- இரண்டு கவிதைகள்
- சின்னவரே! சின்னவரே!
- இன்னொரு உயிர்…
- அவனுக்கென்று ஒரு வானம்…
- காத்திருப்பாயா…