புதிய வகையான கடல் அலை கண்டறியப்பட்டுள்ளது

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

டேவிட் ஒயிட்ஹவுஸ்


ஹவாய் தீவுகளுக்கும் கலிபோர்னியாவுக்கும் இடையே இருக்கும் கடல்படுகையை ஆராய்ந்ததில் புதிய வகையான கடல் அலை இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இது கடல் படுகையை தழுவி, கடல் தரைக்கும் அதன் மேலிருக்கும் தண்ணீருக்கும் இடையே தொடர்ந்து சக்தி பரிமாற்றம் செய்துவருவதை அறிந்துள்ளார்கள்.

இது மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த சின்னா லொம்னிட்ஸ் அவர்களும், அமெரிக்க கடல் ஆராய்ச்சியாளர் ரெட் பட்லர் அவர்களும் இணைந்து செய்த பசிபிக் கடல் தரை அதிர்ச்சி ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கெனவே பேராசிரியர் லொம்னிட்ஸ் அவர்கள் 1985இல் மெக்ஸிகோ பூகம்பத்தின் போது, இணைந்த அலைகள் (coupled waves) என்பது இருக்கக்கூடும் என கூறியிருந்தார்.

அப்போது நகரத்தின் கீழே இருக்கும் களிமண் படுகைகளில் சென்ற நாசம் செய்யும் அலைகள் பல அடுக்கு மாடிக் கட்டடங்களை அழித்தன. கடலில் பரவும் இந்த அலைகள், முன்பு பூகம்பத்தின் போது களிமண் படுகையில் சென்ற அலைகளை ஒத்தவை.

மெக்ஸிகோ நகரத்தில் 1985இல் இருந்த பேராசிரியர் லொம்னிட்ஸ் இந்த பூகம்பம் செய்த அழிவை கண்ணால் பார்த்தார்.

400க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிக் கட்டடங்கள் அழிந்தன. 10000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மெக்ஸிகோ நகரம் மணலின் மீது கட்டப்பட்டுள்ளதால், அதில் இதுவரை அறியப்படாத ஒரு வகை அலை இதில் எந்த விதமான தடங்கலுமின்றி பயணம் செய்ய இயலுவதால்தான் இப்படிப்பட்ட பேரழிவு அங்கு நடந்தது என கருதினார்.

இது இணைந்த அலை – அதாவது இரண்டு அலைகள் தொடர்ந்து ஒன்றுக்கு ஒன்று சக்தி பரிமாற்றம் செய்வது. இயற்பியலின் பல துறைகளில் இப்படிப்பட்ட அலைகள் இருப்பதைக் காண்கிறோம். உதாரணமாக, ரேடியோ அலைகளும் மின்சார அலைகளும் ரேடியோ ஆண்டெணாவில் இணைந்து இருக்கின்றன. ‘ என்று கூறுகிறார்.

கடல் படுகையில் இப்படிப்பட்ட அலைகள் இருக்கலாம் என அவர் கருதியதால், அவர் கடல் ஆராய்ச்சியாளரான டாக்டர் ரெட் பட்லரை அணுகினார்.

ஹவாய் கடல் படுகை ஆராய்ச்சி மையம் (Hawaii-2 seafloor observatory) 2000த்தில் தொடங்கப்பட்டது. இது ஹவாய்க்கும் கலிபோர்னியாவுக்கு இடையே இருக்கிறது. இது பழைய ஆழ்கடல் பசிபிக் டெலிபோன் கம்பியுடன் இணைப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் பல அறிவியல் சாதனங்கள் கடல் படுகையை ஆராய்வதற்கும், தண்ணீரின் இயக்கத்தை ஆராய்வதற்கும் இருக்கின்றன.

இவர்கள் இருவரும் புதிய வகை கடல் அலை இருப்பதை கண்டறிந்துள்ளார்கள். இதனை ராலே அலை என வகைப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த ராலே அலை, ஒலி இணைந்த அலை (coupled acoustic) எனக் கூறலாம். இது தொடர்ந்து தரைக்கும் தண்ணீருக்கும் இடையே சக்தி பரிமாற்றம் செய்து வருகிறது.

எவ்வாறு கடலுக்குள் சக்தி பரிமாற்றம் நடைபெறுகிறது என்பதை ஆராய்வதோடு, இந்த புதிய கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் வரக்கூடிய பூகம்பத்திலிருந்து மெக்ஸிகோ நகரத்தைக் காப்பாற்றுவது எனவும் ஆராய உதவலாம்.

‘மெக்ஸிகோ நகரத்துப் பிரச்னை கடலுக்குள் நடக்கும் சக்தி பரிமாற்றத்தைவிட மிகச் சிக்கலானது. ஆனால், ஒரே இயற்பியல்தான் என நம்புகிறேன் ‘ என்று கூறினார் பேராசிரியர்.

http://www.geo.mtu.edu/UPSeis/waves.html

http://tlacaelel.igeofcu.unam.mx/Cinna%20Lomnitz.htm

http://imina.soest.hawaii.edu/h2o/

Series Navigation

டாக்டர் டேவிட் ஒயிட்ஹவுஸ்

டாக்டர் டேவிட் ஒயிட்ஹவுஸ்