ரிச்சர்ட் டாக்கின்ஸ்
கீழ்க்கண்ட கட்டுரை, ஃப்ரீ என்கொயரி பத்திரிக்கை, வால்யூம் 18, எண் 2 இல் வெளியானது.
வெகுகாலமாக இருந்துவரும் மதங்களை எதிர் கொள்ளும்போது மட்டும் (ஸயண்டாலஜி, மூனிஸம் போன்ற இளைய மதங்களை எதிர்கொள்ளும்போது வராத – ) கோழைத்தனம், மற்ற நேரங்களில் பகுத்தறிவுடன் செய்லபடும் மனிதர்களின் மூளையை மழுங்கடித்துவிடுகிறது. ஸ்டாஃபன் ஜே கோல்ட் (Steven Jay Gould) தன்னுடைய கட்டுரையில், பரிணாமம் பற்றிய போப்பாண்டவரின் அணுகுமுறையை பாராட்டி, இது மத நம்பிக்கையாளர்களுக்கும், மத நம்பிக்கையற்றவர்களுக்கும் இடையே ஒரு இணக்கச் சிந்தனையை பிரதிபலிக்கிறது என்று எழுதுகிறார். (சமீபத்தில் போப்பாண்டவர் பரிணாமச் சிந்தனையை , கடவுள் உலகைப் படைத்தார் என்ற சிந்தனைக்கு விரோதமாய்ப் பார்க்க வேண்டியதில்லை என்று கருத்துத் தெரிவித்தார். மொ பெ.) ‘அறிவியலும் மதமும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல, அவைகளது போதனைகள் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன. நான், என் இதய பூர்வமாய், நான் நேசிக்கும் இணக்க ஆவணம் (Concordat – இது கிருஸ்தவ மதத் தலைவர்கள் அவ்வப்போது அளிக்கும் இறையியல் ஆவணம்.) மீது நம்பிக்கை வைக்கிறேன்.. ‘
சரி, இந்த தனித்தனி வித்தியாசமான பகுதிகள் என்ன ? இந்த ஒன்றை ஒன்று ஆக்கிரமிக்காத தனிப்பிரதேசங்கள் என்ன ? இவை இரண்டையும், மரியாதை செலுத்தும், அன்பு வாய்ந்த கான்கார்டெட்டில் இணைப்பது எவ்வாறு ? கோல்ட் சொல்கிறார், ‘அறிவியல் எண்களின் அடிப்படையிலான அகிலத்தைப் பற்றி பேசுகிறது. இந்த அகிலம் எதனால் கட்டப்பட்டிருக்கிறது என்பதையும் (பெளதீக உண்மை), எப்படி இவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் (தேற்றம்) பற்றி அறிவியல் பேசுகிறது. இந்த உலகத்தின் ஒழுக்க ரீதியான அர்த்தம், இதன் மதிப்பு ஆகியவை பற்றிய கேள்விகளில் மதம் இருக்கிறது… ‘
இப்படி தீர்மானமாகப் பிரிக்க முடிந்திருந்தால் நல்லது தான். நான் போப்பாண்டவர் பரிணாமம் பற்றி என்ன சொன்னார் என்பதையும், அவரது திருச்சபை உண்மையெனக் கோரும் பல விஷயங்கள் உண்மையிலேயே அறிவியலிலிருந்து வேறுபட்டவையா என்பதையும் பின்னால் பார்ப்போம். முதலில், ஒழுக்கவியல் கேள்விகளுக்கு நமக்குப் பதில் அளிக்கவல்ல சிறப்பான தகுதி மதத்திற்கு இருக்கிறதா என்று சுருக்கமாக பேசுவோம். இப்படி தகுதி இருப்பதாக, மதச் சார்பற்றவர்கள் கூட , நாகரீகம் கருதி , ஒரு சலுகை அளிப்பதைப் போல, எதிரிக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் – அந்த வாய்ப்பு மதத்திற்கு அளிப்பதற்கான அடிப்படை மிகப் பலவீனமானது எனினும்- ஒப்புக் கொள்கிறார்கள்.
‘எது சரி, எது தவறு ? ‘ என்பது உண்மையிலேயே கடினமான கேள்வி. நிச்சயம் அறிவியல் அதற்குப் பதில் சொல்ல முடியாது. ஒரு ஒழுக்க ரீதியான அடிப்படையைக் கொண்டு, முக்கியமான விலாவாரியான ஒரு ஆராய்ச்சி அமைப்பாக மதச்சார்பற்ற ஒழுக்கவியல் தத்துவத்தைக் கொண்டு ஆய்வு செய்யலாம். அறிவியற்பூர்வமான, மற்றும் பகுத்தறிவுக்கு ஒத்துப்போகும் சிந்தனையோடு , சரி- தவறு பாகுபாட்டின் பின்னால் இருக்கும் நம்பிக்கைகளில் , ஒன்றுக்கொன்று முரணாக இருக்கக்கூடிய விஷயங்களை ஆராயலாம். ஆனால், நிரந்தரமான கறாரான ஒழுக்கவியல் அடிப்படைகள் வெளியேயிருந்துதான் வரவேண்டும். அதுவும் விவாதிக்க முடியாத கொள்கையின் அடிப்படையிலிருந்துதான் வரவேண்டும். அல்லது, மதத்திடமிருந்து வரலாம் என நம்பிக்கை கொள்ளலாம். அதாவது ஒரு அதிகாரம், பாரம்பரியம், புனிதப்புத்தகம், அசரீரி, கடவுளின் குரல் ஆகியவைகளின் இணைப்பிலிருந்து வரலாம்.
துரதிர்ஷ்டவசமாக, மதம் என்பது நமக்கு ஒரு அடித்தளக் கல்போல இருக்கும் என்ற நம்பிக்கையும், நாம் அதனைச் சார்ந்து ஒழுக்கங்களை பெறலாம் என்ற நம்பிக்கையும் கானல் நீராகி விட்டது. நடைமுறையில், எந்த ஒரு பகுத்தறிவுள்ளவனும், புனிதப்புத்தகத்தை ஒழுக்கவியல் காரணகாரியத்துக்கு ஒரு கேள்விக்காளாகாத ஆதாரமாக உபயோகப்படுத்துவதில்லை. பதிலாக, நாம் புனிதப்புத்தகத்திலிருந்து அங்கு ஒரு துண்டமும், இங்கு ஒரு மேற்கோளுமாக (ஏசுவின் மலைப் பிரசங்கம் போல) உபயோகப்படுத்திக்கொண்டு, மற்ற அசிங்கமான உபதேசங்களை (திருமணத்துக்கு வெளியே உறவு கொள்பவளைக் கல்லாடித்துக் கொல்வது, கடவுளை மறுதலிக்கிறவனுக்கு மரணதண்டனை வழங்குவது, குற்றவாளிகளின் பேரப்பிள்ளைகளுக்கு தண்டனை தருவது போன்றவை) சந்தோஷமாக உதாசீனம் செய்துவிடுகிறோம். பழைய ஏற்பாட்டின் கடவுளின், பழிவாங்கும் குணம் கொண்ட பொறாமைத்தனத்தையும், இனவெறியையும், பெண்களை கேவலமாக நடத்துவதும், பயமுறுத்தக்கூடிய ரத்தவெறியையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், நமக்குப் பின்பற்றத்தக்க ஒரு முன்மாதிரியாக, நானோ, நீங்களோ, நமக்கு அறிமுகமுள்ள யாருமோ எடுத்துக்கொண்டதில்லை. முந்தைய யுகத்தின் ஒரு பழக்கவழக்கங்களை, இன்றைய காலத்தின் தரத்தின் படி எடைபோடுவது சரியில்லை என்பதும் உண்மை தான். ஆனால், அதே தான் நான் சொல்லவிரும்பும் முக்கியமான விஷயம். ஆகவே, நாம் இன்னொரு ஒழுக்கரீதியான அடிப்படைகளை, நமக்குத் தேவைப்படும்போது, புனிதப்புத்தகங்களைப் புறமொதுக்கித் தான் , வேறு விதங்களில், பெறுகிறோம்.
இந்த இன்னொரு ஆதாரம், நம் தாராளவாத பொது நோக்கும், நாகரீகமும், இயற்கையான நீதியும், வரலாற்றின் முழுவதும், மதச்சார்பற்ற சீர்திருத்தக்காரர்களால் தூக்கிப்பிடிக்கப்பட்ட ஒன்று. உண்மைதான். இது கல்போல உறுதியான அடித்தளம் அல்ல. ஆனால், நடைமுறையில், நம்மில் மதச்சார்புள்ளவர்கள் உட்பட, இதைத்தான் தங்கள் புனிதப்புத்தகங்களைவிட உயர்வாக மதிக்கிறார்கள். நடைமுறையில் நாம் ஏறத்தாழ புனிதப்புத்தகங்களை உதாசீனம் செய்துவிடுகிறோம். நம்முடைய தாராளவாதப் பொதுச் சிந்தனைகளுக்கு எது உபயோகமாக இருக்கிறதோ, அதற்கு தகுந்தாற்போன்ற புனிதப்புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறோம். நமக்கு வசதிப்படாத மேற்கோள்களை செளகரியமாக மறந்துவிடுகிறோம். இந்த தாராளவாத பொதுசிந்தனை எங்கிருந்து வந்திருந்தாலும், நாம் மதச்சார்புள்ளவர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, நமக்குப் பொருந்தி வருவது.
அதே போல, பெரும் மத போதகர்களான ஏசு, கெளதம புத்தர் போன்றவர்கள் நம்மைப் பெரும் செயலுக்குத் தூண்டுகிறார்கள். உதாரண புருஷர்களாய் தம்முடைய ஒழுக்க நெறியின் காரணமாய் நமக்கு ஆதர்சமாகிறார்கள். ஆனால் மதத்தலைவர்களின் நடுவிலும் , ஜிம் ஜோன்ஸ், சார்லஸ் மான்சன் போன்ற கொடூரர்கள் உண்டு. அவர்களைத் தவிர்த்து மதச்சார்பற்ற உதாரண புருஷர்களான ஜவகர்லால் நேரு, நெல்சன் மண்டேலாவைப் பின்பற்றலாம். பழங்கால மரபுகளில் எது நல்லது எது கெட்டது என்று காண்பதற்கு நம் அறிவைப் பயன்படுத்துகிறோம்.
அறிவியலின் களத்தில் நுழையும் மதம்
ஒழுக்க நெறிகள் பற்றிய இந்த விவாதம் நம் விவாத மையத்திற்கு வெளியே இருப்பது. என் இப்போதைய முக்கிய விஷயத்திற்கு வருகிறேன் : விஞ்ஞான வெளியில் கால் பதிக்காமல் போப் இருக்கிறாரா என்பது கேள்வி.
‘போப்-களின் அறிவியல் அகதமியின் வளர்ச்சி ‘ பற்றிய அவர் உரை முந்திய போப்பான ‘பனிரெண்டாம் பயஸ் ‘ தயக்கத்துடன் பரிணாமத்தை ஒப்புக் கொள்வது பற்றிப் பேசுகிறார். இதன் பின்பு விஞ்ஞான ஆதாரங்களை, கடவுளின் வாக்குடன் சரிநிகர் நிறுத்தக் கடின முயற்சியை மேற்கொள்கிறார்.
விவிலியத்தின் அசரீரிகள் கடவுளைப் போன்ற வடிவில் மனிதன் படைக்கப் பட்டான் என்று சொல்கின்றன. . மனித உடல் முன்பே இருந்த உயிருள்ள ஒரு பொருளை அடிப்படையாய்க் கொண்டுள்ளதெனில், ஆன்மாவோ கடவுளால் உடனடியாய் உருவாக்கப் படுகிறது. . இதன் தொடர்ச்சியாய் , பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் படி, வாழும் உயிரிகளிலிருந்து உருப்பெறும் , மனம் என்பது உடலென்ற பெளதீகப் பொருளின் அடிப்படையாகவும், அழியக் கூடிய பொருளான உடலின் தொடர்ச்சியாய்க் காணப் படுகிறது..இது மனிதன் பற்றிய உண்மைக்குப் புறம்பானது.. மனிதனைப் பொறுத்தவரை ஒரு இருத்தலியல் பாய்ச்சலைக் காண்கிறோம் என்று சொல்லலாம்- இது போபின் கூற்று.
போப்பிற்கு ஒரு பாராட்டைத் தெரிவிக்க வேண்டும். தான் சமரசப் படுத்த முயலும் இரண்டு விஷயங்களின்முரண்பாட்டை உணரத்தான் செய்கிறார்.: ‘ இந்தத் தொடராத் தன்மை ( அதாவது ஆன்மா-உடல் தொடராத் தன்மை, உடலின் தொடர்ந்த பரிணாமம் ஆதாரங்களுடன் தெரிவது, ஆன்மாவின் பரிணாமம் பற்றி எதுவும் சொல்ல முடியாத ஒருதன்மை – மொ பெ) பெளதீகத் தொடர்த்தன்மைக்கு முற்றிலும் முரண்பட்டதாய்த் தோன்றுகிறது. ‘
பயப்பட வேண்டாம். கடந்தகாலத்தில் குழப்பங்களைத் தெளித்தது போலவே , இப்போதும் செய்கிறார்:
‘பல விஞ்ஞானத் துறைகளில் கொண்டுள்ள முறைமைகளைப் பயன்படுத்தி இந்த முரண்பாட்டைச் சமன் செய்யமுடியும். காட்சி விவரண ஆதாரங்கள் பல முறைகள் பரிணாமத்தின் உடல் ரீதியான வளர்ச்சியை துல்லியாமாக விளக்கியுள்ளன. எந்தக் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படிநிலை ஏற்பட்டது என்பதும் துல்லியமாய் விளக்கியுள்ளன. இது போன்ற ஆதாரத்தை, ஆன்மா குறித்து கறாரான முறையில் கோர முடியாது எனினும், சோதனை முயற்சியின் மூலம், ஒரு குறிப்பிட்ட மனிதனின் குறிப்பிட்ட குணாம்சங்களைக் காண முடியும். – இது போபின் கூற்று
அதாவது, மனிதனுக்கு முனிபிருந்த பரிணாம வளர்ச்சியின் ஒரு பை நிலையில் கடவுள் திடாரென்று குறுக்கீடு செய்து, ஆன்மாவை அவனுக்குள் செலுத்தினார் என்பது போப்பின் கூற்று. (எப்போது பத்து லட்சம் வருடங்கள் முன்பா ? இருபது லட்சம் வருடங்கள் முன்பா ? ) இப்படி திடாரென்று கடவுள் ஆன்மாவை அவனுக்குள் செலுத்தினார் என்ற இந்தப் பார்வை இல்லையென்றால், கத்தோலிக்க ஒழுக்கம் வலியுறுத்த வேறு வழியே இல்லையே. மிருகங்களை உணவுக்காகக் கொல்வது தவறில்லை, ஆனால் கருக்கலைப்போ, மருத்துவர்கள் கருணை கருதி பெருநோயாளிகளைத் தம் உயிரை முடித்துக்கொள்ள அனுமதிப்பது பாவம் . ஏனென்றால் மனித உயிர் சம்பந்தமான விஷயம் இது.
கத்தோலிக்க மதத்தில் ‘வலை ‘ ஒழுக்கம் பற்றியது மட்டுமல்ல, இப்படி விஞ்ஞானம் என்று சொல்லிக் கொள்வதும் வேண்டும். மனிதருக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இப்படியொரு பெரும் அகழியை வலியுறுத்துவது. இந்த அகழி, பரிணாமத் தத்துவத்திற்கு முரணானது. திடாரென்று ஆன்மாவை மனிதனுக்குள் கடவுள் செலுத்தினார் என்ற பார்வை, பரிணாமத் தத்துவத்துக்கு எதிரானது.
கோல்ட் போன்றவர்கள் சொல்வது போல், மதம் விஞ்ஞானத்திலிருந்து தன்னை விலக்கிவைத்துக்கொண்டு, வெறும் ஒழுக்க நெறிகளைத் தான் போதிக்கிறது என்பதும் சரியல்ல. அறிவுக்கெட்டாத ஒரு கடவுள் உள்ள பிரபஞ்சம், இதிலிருந்து வேறுபட்ட பிரபஞ்சத்திலிருந்து முற்றிலும் மாறியிருக்கும். இது அறிவியல் பூர்வமான வேறுபாடே தான். கடவுள் இருக்கிறார் என்ற மதக் கோட்பாடே ஒரு விஞ்ஞானக் கோட்பாடு தான்.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் முக்கிய ஆவணங்களும் கூட இந்தப் பிரசினையைக் கொண்டவையே. கன்னி மேரியின் கர்ப்பம், மேரி உடலோடு நேராய்ச் சொர்க்கம் புகுவது, ஏசுவின் உயிர்த்தெழுதல், நம் ஆன்மாக்கள் நம் இறப்புக்குப் பின்பு இருக்கிற கோட்பாடு – இந்தக் கோட்பாடெல்லாம் நிச்சயம் அறிவியல் கோட்பாடுகளே. இது வெறும் ஒழுக்க நெறி பற்றியதோ, விழுமியங்கள் பற்றிய கோட்பாடோ அல்ல. இது ‘உண்மைகளின் ‘ பாற்பட்ட கோட்பாடு. இதற்கு பதில் சொல்ல ஆதாரங்கள் இல்லையெனினும், இவை அறிவியல் கருதுகோள்களே. இதற்கு ஏதும் ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில் திருச்சபை வரிந்து கட்டிக் கொண்டு ஆதாரங்களைப் பரப்பி ஸ்தாபிக்கும் என்பதும் நிச்சயம்.
மேரியின் உடல் இறந்தபின்னர், மற்ற உடல்கள் போலவே வீணாகியிருக்க வேண்டும், அல்லது நேராக சொர்க்கம் ஏகியிருக்க வேண்டும். 1950 வாக்கில் திருச்சபை வெளியிட்ட அறிவிக்கையில் மேரி நேராக உடலுடன் சொர்க்கத்தில் புகுந்தார் என்று சொல்லப் படுகிறது. எனில், சொர்க்கமும் பெளதீக தளத்தில் இருக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது ? உடலுடன் சொர்க்கம் போன விஷயம் பொய்யென்று நான் எண்ணினாலும், நான் சொல்லவருவது அதல்ல. இந்தக் கோரிக்கை விஞ்ஞான தளத்தில் உள்ளது தான் என்பது என் வாதம். ஆன்மா இறப்புக்குப் பின்பும் இருக்கும் என்ற வாதமும், தேவதைகள் வந்து மனிதர்களுக்கு உதவும் செய்திகளும், மேரி காட்சி கொடுக்கும் செய்திகளும், அற்புதங்கள் எல்லாமே, விஞ்ஞான தளத்திலான விஷயங்களே.
எல்லா மதக் கோட்பாடுகளும், விஞ்ஞானத்திற்கு வெளியே உள்ளன என்ற வாதமே, ஒரு விதத்தில் இதுபற்றி விவாதங்களைத் தவிர்ப்பதற்காக ஏற்பட்டவை. அற்புதங்கள், மரணத்துக்குப் பிறகு சொர்கக்ம் போன்ற வாதங்களைப் பயன் படுத்தி எளியமக்களைக் கவர்ந்து, மதம் மாற்றி, மதத்தில் ஆட்களை அதிகரிப்பது ஒரு புறம். இவற்றின் விஞ்ஞானத் தோற்றமே மக்களைக் கவரவல்லது என்பது முக்கியமான விஷயம். ஆனால், கூடவே, மதத்தின் அடிப்படைகள் விஞ்ஞானத்திற்கு வெளியே இயங்குகின்றன அதனால் அதைக் கோள்வி கேட்கக் கூடாது என்பது இன்னொரு புறம். இவர்கள் இரண்டு விதமாகவும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் தப்பித்துப் போய் விடுகிறார்கள் . இதை அனுமதிக்கலாகாது.
போப் ‘அடிப்படைவாதக் கருத்தான கடவுளே சகலமும் உருவாக்கினார் ‘ என்ற போக்கிற்கு எதிராக இருப்பது, நல்லதே. ‘கடவுளே எல்லாவற்றையும் உருவாக்கினார் ‘ என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்களின் மீது அடி விழுவது எனக்கு மகிழ்ச்சியே. இவர்களைப் பார்க்கில், போப்பின் இரட்டை வேடம் எவ்வளவோ தேவலாம் என்பது என் கருத்து என்பதும் உண்மையே.
- நானும் நீயும்.
- வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா ?-1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )
- கலிஃபோர்னியாவில் தமிழ் இணைய மாநாடு 2002
- தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
- மெக்ஸிகன் சாதம்
- முட்டை, முட்டைக்கோஸ் வறுத்த சாதம் (டேஸ்டி பிரைட் ரைஸ்)
- பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை
- வெண்ணிலவில் முதற் தடம் பதித்த விண்வெளித் தீரர்கள்
- அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது
- கண் கெட்ட பிறகே….
- வேண்டாம் பகை
- நான்கு ஹைக்கூக்கள்
- பிலிப்பு
- முற்றத்தில் முதல் சுவடு
- சலிப்பு – ஐந்து கவிதைகள்
- நாஞ்சில் நாடன் கவிதைகள்
- வீரமும் விடியலும் (இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டார்களா ?-1 கேரளத்தின் முதல் தலித் போராளி அய்யன் காளி )
- அறிவியலின் பாதையில் மதம் குறுக்கே வரும்போது
- பிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (obsession)
- தஞ்சை ஆபிரகாம் பண்டிதர்
- லு பென் : ஒரு அய்ரோப்பிய பயங்கரவாதம்
- பின்-மனித எதிர்காலம் பற்றிய ப்ரான்ஸிஸ் ஃபுகுயாமா-வின் இருண்ட பார்வை
- இழந்த யோகம்