நகல் டாலி ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது கோழிகளை தயாரித்திருக்கிறது

This entry is part [part not set] of 10 in the series 20001203_Issue


டாலி என்ற நகல் ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது புது கோழிகளை தயாரித்திருக்கிறது. இந்த புதுவிதக் கோழிகள் எந்த கோழியின் நகலும் அல்ல. இவை புத்தம் புது உயிர்கள். இதுபோல் கோழிகள் இதுவரை இருந்ததில்லை.

மெயில் என்ற இங்கிலாந்தின் ஞாயிற்றுக்கிழமை பத்திரிக்கை எழுதியிருக்கும் விவரப்படி, இந்த கோழிகளின் டி என் ஏ மாற்றப்பட்டு, இந்த கோழிகளின் முட்டைகள் ஒரு குறிப்பிட்ட புது புரோட்டின் இருக்கும்படியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த புதுவிதக் கோழிக்கு பிரிட்டனி என்று பெயர் வைத்திருப்பதாக டாலி நகல் செய்த ரோஸலின் நிறுவனம் Roslin Institute தெரிவித்திருக்கிறது.

எடின்பராவில் இருக்கும் இந்த அறிவியலறிஞர்கள் அமெரிக்காவில் இருக்கும் நிபுணர்களோடு இணைந்து இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

முட்டையில் இருக்கும் வெள்ளைக்கருவில் இருக்கும் புரோட்டான்கள், கோழியின் ஜீன்களில் இருக்கும் ஆணைகளின் படி உருவாக்கப்படுகின்றன.

தேவையான புரோட்டான்கள் முட்டையிலிருக்குமாறு ஆணைகளை கோழியின் ஜீன்களில் எழுதி அந்த விதக்கோழிகளை உருவாக்கி இதுபோன்ற முட்டைகளைத் தயாரிக்கலாம்.

ஒவ்வொரு கோழியும் வருடத்துக்கு 250 முட்டைகள் இடுமாறும், தேவையான புரோட்டான்கள் அதிகமான அளவு இருக்குமாறும் இந்த கோழிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த உபயோகமான புரோட்டான்களை பரிசோதனைச்சாலைகளில் குறைந்த அளவில் தயாரிப்பதுகூட கடினமானதாகவும் அதிக செலவாகவும் இருந்தது.

இந்த பிரச்னை காரணமாக புதிய மருந்துகளை கண்டுபிடிப்பது கடினமானதாக இருந்தது. முக்கியமாக மார்பு புற்றுநோயும், கருப்பை புற்றுநோய்க்கும் மருந்துகளை கண்டுபிடிப்பது கடினமானதாக இருந்தது.

விராஜென் என்னும் அமெரிக்க பயோடெக் கம்பெனியும் ரோஸ்லின் நிறுவனமும் இணைந்து இந்த பிரிட்டனி என்ற கோழியை இதற்காக உருவாக்கியிருக்கின்றன.

Series Navigation

செய்தி

செய்தி