கருத்தற்ற காதல் மற்றும் (வாழ்வு) குறித்து

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

காளி நேசன்


“…ஆற்றல் போற்றாது, என் உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; …..அவன் வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய தீதுஇல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!” (சோழன் நலங்கிள்ளி, புறநானூறு-73);

சங்க காலத்தில் இப்படி ஒரு வல்லமை பொருந்திய மன்னன் கூட காதலில்லா மகளிர் அவன் உடல் தழுவுவதை சாபமாக பார்க்கிறான்.

ஒரு பெண்ணோ ஆணோ தனது உடலையும் உள்ளத்தையும் தான் விரும்பும் ஒருவர்க்கு அளிக்க இசைவதற்க்கு முன், முக்கியமாக முன் வைக்க வேண்டிய கேள்வி, அந்த உறவு உண்மையான ஆத்மார்த்தமாக அமைந்ததா என்பதுதான். ஈர்ப்பு, காமம் என்கிற பௌதீக உணர்வுகளை கடந்து அந்த உறவில் உண்மை இருக்கிறதா என்பதுதான். இதை இப்படி சொல்லலாம், தான் இசைந்த அந்த உறவு எல்லாவித சாதி, மதம், சமூக அந்தஸ்து, மொழி, இனம், ஆகிய தடைகளை கடந்து தன்னை ஒரு வாழ்க்கை துணையாக ஏற்று கொண்டிருக்குமா என்பதுதான் (எதிர் சூழ்நிலைகள் காரணமாக துணையாக அமையா விட்டாலும்!) என்பதுதான். அப்படி ஒரு புரிதல் இல்லாத நிலையில் அந்த உறவு ஒரு வர்த்தக பரிமாற்றமே எனலாம்.

தருவதுதான் காதல்

பெறுவது இல்லை

தருவதும் தான் இழந்து நிற்பதும் காதல்

என உயிரின் ஆழம் அளக்கும்

அவன் காதல் பெறுவது எளிதல்ல தெய்வே;

தகாத வார்த்தைகளால் தகுதி

அளக்கும் தப்பான மனிதன் அல்லவன்

நல்ல பெண் எனதான் சொன்னான்

காளி என்றான் கொற்றவை என்றான்

கண்கள் நீங்(க்)கா அழகிய தெய்வென்றான்;

கண்ணீர் ததும்பி நின்ற நிலை

காலங்கள் தோறும் கனநனவில்

தோன்றி உ(ம)றையும்;

உள்(ஊழ்) மறந்து பெற்ற

உலுத்த நட்புகள் அறியான்;

பாதையில் மலர்களை செரிந்த மரங்களையும்

பாதங்களை தைத்த முட்களையும் அறியான்

பேரன்புடன் உள் உரை(றை)ந்து

வாட்டி வதைக்கும் காதலில்

வாடி வதங்கி நின்றவன்

கால இடம் கடந்த காதலும்

கருத்தும் கண்ணியமும் அறியாய் நீ

இல்லாமல் நின் இல் கடந்தவனை

எல்லாம் இழந்தவன் ஆக்கிய உலகு நீ !

Series Navigation

காளி நேசன்

காளி நேசன்