தூண்டிற்புழு

This entry is part of 24 in the series 20100108_Issue

ப.மதியழகன்


மெளன மொழி புரிகின்றது
மனதின் வேஷம் கலைகின்றது
முகமூடி உருக்குலைகின்றது
மனிதமுகம் தெரிகின்றது
மழலை தேனாய் இனிக்கின்றது
மீண்டும் குழந்தையாக உள்ளம் துடிக்கின்றது
வாழ்க்கை வரமாய் தோன்றுகின்றது
மறுமுறை பிறக்க மனம் ஏங்குகின்றது
நாட்கள் கணமாய் ஓடுகின்றது
நதியலைபோல் சூழ்நிலை மாறுகின்றது
தோல்வி கூட இனிக்கின்றது
வெற்றி எதில் இங்கு இருக்கின்றது
தடுக்கிவிழ கால்கள் துடிக்கின்றது
தாங்கும் கைகள்
அவளுடையதாய் இருக்க வேண்டுமென
உள்ளம் தவம் கிடக்கின்றது
கடிதங்கள் தூது போகின்றது
கவிமகளை நெஞ்சம் நாடுகின்றது
மழை வந்து மேனியை நனைக்கின்றது
அவளைச் சந்திக்காமல் உள்ளம் கொதிக்கின்றது
ஆகாரம் கண்ணெதிரே இருக்கின்றது
எண்ணச் சிறகுகள் எங்கெங்கோ பறக்கின்றது
காலை கதிரொளி எழுகின்றது
கனவுகள் விடை பெறுகின்றது
உறக்கம் மெல்ல களைகின்றது
உண்மை வேறாய்த் தெரிகின்றது
காட்சிகள் பொய்யெனப் புரிகின்றது
கற்பனை நின்றிட மறுக்கின்றது
இங்கு எல்லாம் சரியாய் இருக்கின்றது
வேறெங்கே என்னைத் தொலைக்கின்றது!

,

Series Navigation