வேத வனம் -விருட்சம் 35

This entry is part [part not set] of 24 in the series 20090521_Issue

எஸ்ஸார்சி


இந்திரனே தச்யுக்களின்
கோட்டைகள் துகளாயின
உன்னை வணங்கியோன்
எதிரியை வச்சிராயுதம் கொண்டு வீழ்த்து
புகழொடு வலிமை பொலிக ஆரியர்க்கு. ( ரிக் 1/130

வைகறைச்செல்வி
உறங்கி எழுவோரில்
ஒருவரை இன்பத்துக்கும்
அடுத்தவரை வேள்விக்கும்
இன்னொருவரை பொருளீட்டவுமாய்
அவரவரை அவர் பணிக்கெழுப்புகிறாள் (ரிக் 1/113)

ஆட்சிக்கும்
அருளுக்கும்
பொருளுக்கும்
உழைப்புக்குமாய்
அவரவரை அவளே விடியல் முன் கெணர்கிறாள்

அசுவினிகளே நீவிர்
கலப்பையால் உழப்பட்ட வயல்களில்
பார்லி விதைத்து மநுவுக்காக
மழை கொணர்ந்து
வச்சிராயுதத்தால்
தச்யுவைக்கொன்று
ஆரியர்க்கு ஒளி அருளியவர்கள் ( ரிக் 1/117)

அசுவினிகளே துன்புறும்
குருடன் நான்
என் பாட்டைச்செவியுறுங்கள்
நல்லது போற்றும் உம்மால்
கண்ஒளி பெற்றேன் யான்

கனவும் வேண்டாம்
ஏழைக்குதவா செல்வமும் வேண்டா
இரண்டும் நில்லாதொழிவது நிச்சயம். (ரிக் 1/120)


Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி