கடவுள்

This entry is part of 33 in the series 20090212_Issue

ரா.கணேஷ்


நான் பொக்கிஷமாய்
காக்கும்
அம்மா புடவை

இருளிலும்
என் நிழலாய்
வரும்
என் வாழ்வின்
வெளிச்சமவள்
என் தாரம்

அவளின்
பச்சை நிற
ரவிக்கை

எங்களினூடே
காற்று
நசுங்கிப் பாடுபடும்
அந்தத் தருணங்கள்

மங்கலக் குங்குமம்
குடியேறும்
அந்த அகன்ற
நெற்றி

என்
ஆறு வயது
மகனின்
பிஞ்சு விரல்கள்

பம்பரமாய்
சுற்றும்
அவனின் வேகம்

என் முதுகில்
சவா¡¢ செய்யும்
போது
பதியும் அவன்
முத்தத்தின் ஈரம்

குடித்த பின்
நாவில்
மணக்கும்
காலை காபியின்
பிசுக்கு

மழிக்க மழிக்க
தினமும்
எழும்
முள்தாடி

என்றுமே
எனை
அழகாய் காட்டும்
என் வீட்டு
ஆளுயர கண்ணாடி

என்
கைரேகைகளை
மையாய் தினமும்
குடிக்கும்
என் பேனா

இது போன்ற
சுவாரஸ்யங்களை
ரசிக்கும்
வேளைகளில்

இறைவா..!

உனை மறந்து
போகின்றேனே !
எனை
மன்னித்து விடு

இல்லை…..

அத்தருணங்களில்
தெறிக்கும்
தீப்பொ¡¢யில்
எனை மறக்கின்றேனே
அதுதான்
நீயோ….!

– ரா.கணேஷ்.

Series Navigation