சொர்க்க நொடிகள்
Published October 16, 2008 • By
ரஜித்
ரஜித்

பிரிந்த என் பிறந்த மண்ணைத்
தொட்டுத் தொழுத நொடி
நீண்டநாள் பிரிந்த
நாடித்துடிப்பு நண்பனை
தழுவி அழுத நொடி
கடைசித் தேர்வின் அந்தக்
கடைசி நொடி
ஏழெட்டு மணிநேரமாய் வயிற்றில்
ஏறோட்டிய இயற்கைஅழைப்பை
இறக்கிவைத்த நொடி
தோல்விகள் பல தொடர்ந்து
இறுதியில் விருதினை வென்ற
அந்த வெற்றி நொடி
வானம் மேகம் விட்டு
மழைத்துளி மகள்
விடைபெறும் நொடி
முதற் கர்ப்பம் தெரிந்த நொடி
ஆணா பெண்ணா அவிழ்ந்த நொடி
அவள் காதல் சொன்ன
கல்யாணி ராகம் எனைக்
கரைத்துக் கடந்த நொடி
rajid_ahamed@yahoo.com.sg