ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

ரஜித்



அம்புலி முகம்
அல்லிப்பூ தேகம்
ஆனால்
பேசாது கேட்காது
மூன்று புலன்களோடு
ஊனப்¢பிள்ளை ஒன்று

அகரம் கற்கையில்
சிகரமானவனாம்
அய்ன்ஸ்டீனின் அவதாரமாம்
ஞானப்பிள்ளை ஒன்று

கரு சுமந்த தாய்க்கு
துருவங்களாய்ப் பிள்ளைகள்
இருவர்

இமைகளாய் இருந்தான்
ஊனப்பிள்ளை
பார்வையாய் விரிந்தான்
ஞானப்பிள்ளை
ஒட்டிக்கிடந்தான்
ஊனப்பிள்ளை
ஊர்வலம் வந்தான்
ஞானப்பிள்ளை

இப்படியே சென்றன
இருபது ஆண்டுகள்

கல்வியைத் தொடர
லண்டன் சென்றதில்¢
கட்டிச்சேர்த்த வீடு
கைவிட்டுப் போனது

கல்வியோடு
காதலும் கற்றான்
கலவியும் கற்றான்
கருவுக்கும் தந்தையானான்
ஞானப்பிள்ளை

விழுந்த இடத்தில்
முளைத்தான்
பிறந்த இடம் மறந்தான்

இங்கே
வாத நோய் அப்பாவுக்கும்
மூல நோய் அம்மாவுக்கும்
மலம் கழுவுகிறான்
ஊனப்பிள்ளை

பெற்றோரே உங்களுக்கு
ஞானப்பிள்ளை வேண்டுமா?
ஊனப்பிள்ளை வேண்டுமா?


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation

ரஜித்

ரஜித்