தாகூரின் கீதங்கள் (19-20) குருவும் நீ சீடனும் நீ !

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


அன்னையின் வடிவத்தில் தெய்வம்
அன்பு வெள்ளத்தைப்
பொழியும் என்று
தெரிந்து கொண்டேன் இப்போது !
மகன் வடிவத்தில் வந்து
மறுபடிப் பெற்றுக் கொள்ளும்
அந்த அன்பை !
கொடையாளி யாக முன்வந்து
கொடுக்கும் !
யாசக னாகப் பின்வந்து
பெற்றுக் கொள்ளும் !
சீடனாய் வந்து
காட்டும் தன் பக்தியை !
குரு நாதனாய்த் தோன்றி ஆசி
அருள் பொழியும் !

காதலனாய் இறைவன் வந்து
கல்நெஞ்சை உடைத்து
அன்பு
ஊற்றுகளை
ஏற்றுவான் அதன் மீது !
எல்லோருடன்
ஒட்டிக் கொள்பவன் அவனே !
மேலும் உன்னை
விட்டுச் செல்பவன் அவனே !
இறைவனின்
பிணைப்பு அரங்க மான இந்தப்
பிரபஞ்சத்தில்
விரித்துள்ளது வலையை
என்னிதயம் !
உன் அன்பு மடிக்கு
முழு உலகும்
இழுத்துச் செல்கிற தென்னை !
இந்த பந்த பாசப் பிணைப்பே
நிரப்பும் என்
நெஞ்சத்தை நில மாந்தர்
இன்ப துன்ப
நிகழ்ச்சியுடன் !

++++++++++

தாகூரின் கீதங்கள் – 20
கூடுவந்தடையும் வானம்பாடி

வானுயரப் பறக்கும் போது
வானம்பாடி
வையத்தை விட்டு நீங்கியதாய்
உள்ளத்தில்
எண்ணிக் கொள்ளும் !
உந்தி உந்தி மேற் சென்றாலும்
உலகை முற்றிலும் விட்டு
அகல முடியா தெனப்
பிறகு
புரிந்து கொள்ளும் !
கூட்டை வந்தடையும்
கடைசியில்
களைத்துப் போய் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 3, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா