எங்கள் தாய் !

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

சி. ஜெயபாரதன், கனடா


இல்லத்தில் அம்மா ராணிதான் !
ஆயினும்
எல்லோருக்கும் அவள் அடிமை !
வீட்டில்
அத்தனை பேரும் ராஜா !
நித்தமும்
பின்தூங்கி முன்னெழுவாள்
அன்னை !
பித்துப் பிடிக்காத
பேதை !
எந்தப் பிள்ளைக்கும் அவள்
சொந்தத் தாய் !
பால் கொடுப்பாள்
பாப்பாவுக்கு !
முதுகு தேய்ப்பாள்
அப்பாவுக்கு !
இனிதாய் உணவு சமைப்பாள் !
என் வாயில் ஊட்டுவாள் !
வேலையில் மூழ்கி
வேர்வையில் குளிப்பாள் !
எப்போதாவது அடி வாங்குவாள்
அப்பாவிடம் !
தப்பாது மிதி வாங்குவாள்
தமயனிடம் !
கையை முறிப்பான்
கடைசித் தம்பி !
கலங்கும்
கண்ணீரைத் துடைப்பது
கனலும் காற்றும் !
பளுவைக் குறைப்பது அவளது
நோயும் நொடியும் !
ஆயுளை நீடிக்க வைப்பது
தாயுள்ளம் !
உயிருள்ள போது ஒருவராலும்
வணங்கப் படாது,
செத்த பிறகு
தெய்வ மாகிறாள் !

*********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan October 16, 2007]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா