மீண்டு வருவாரோ?

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

ஆதிராஜ்



சுரக்கின்ற கண்ணீ£ரின்
சூடு தனியுமுன்னே
‘இருக்கின்றேன் அஞ்சேலெ’ன்
றெனைத் தொட்டுச் சொல்வாரோ?

தெருவாசல் வழி பார்த்துத்
தனிவாசஞ் செய்கின்றேன்!
மருவாசத்துடன் வந்து
மனவாசம் செய்வாரோ?

பாலோடும் பழமோடும்
பலகாரம் செய்து வைத்தேன்
நாலோடும் வந்தவர்க்கு
நல்விருந்து தருவாரோ?

மெய்வழியும் சோர்வொடு
மெதுநடையாய் வருவார்க்கு
கைவழிய நெய்யூற்றிக்
கண்வழியப் பாரேனோ?

என்னடி என்னடி என்பார்க்
கேது குறை வைத்துவிட்டேன்?
பொன்னடி பிடித்தபடி
புதுக் கதைகள் கேட்பேனோ?

கூப்பிட்ட குரலுக்கு
குதித்தோடி வருவேனோ?
சாப்பிட்ட மீதத்தைத்
தவமிருந்து பெருவேனோ?

மாளாத துயரத்தை
மானியமாய் வைத்தாரே!
மீளாமல் போனாரே
மீண்டுவரக் காண்பேனோ?

– ஆதிராஜ்


Series Navigation

ஆதிராஜ்

ஆதிராஜ்