வழக்கமான நாட்களும்…வந்துபோகும் கவிதைகளும்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

மீ.வசந்த்



____________________________________________

சுட்டெரிக்கும் சூரியனாய்
கருத்தரிக்கும் கவிதைகள்,
குளிர் நிலவும் நிலவுகளாய்
பிரசவிக்கப் படுகின்றன.

ஆனிவேர் அறுக்க
அவதாரம் எடுத்தவர்கள்,
அடிமர நிழழோரம்…
படுத்துத் தூங்கவே,
பழக்கப் படுகிறார்கள்.

எலும்பு துருத்தும்
சதையில்லா உடல்கள்,
இலவச உடைகளில்
வேடமிட்டுக் கொள்கின்றன – தாம்
இறப்பது தெரியாமல்.

பாரதி வளர்த்த
அக்(கி)னிக் குஞ்சுகள்,
ஆக்சிஜனில்லா காகிதங்களில்
அச்சடிக்கப் படுகின்றன.

சாதிக்கப் பிறந்ததாய்
மார் தட்டும் இளமை,
நடைமுறை வாழ்வில்
சாதாரன மனிதனாய்?!.

……………
முடிக்க மனமின்றி,
புதிர்களும்…,
புள்ளிகளுமாய் தொடர்கின்றன,
வழக்கமான நாட்களும்
வந்து போகும் கவிதைகளும்.


மீ.வசந்த்

Series Navigation

மீ.வசந்த்

மீ.வசந்த்