தலைமுறை இடைவெளி

This entry is part of 25 in the series 20061130_Issue

ரஜித்


விரல்நுனி பிதுக்கலில்
விரிகிறது அங்கே
வெள்ளித் திரை
உள்ளங்கையில் ஓர் உலகம்
அயப்¢பாட்
அய்யோ அதிசயம்
விலை

என் கல்லூரி வாழ்க்கையின்
மொத்த செலவினும் அதிகம்
வாங்கித் தந்தேன்

நோக்கியா N 80
கெஸ் கால்சட்டை
மேல் சட்டை
நைகீ காலணி
நீண்டகாலக் கனவென்றான் பிள்ளை
விலை

இந்தக் குப்பையில்
குண்டுமணி கண்டவளின்
கரம்பிடித்த கணக்கினும் அதிகம்
வாங்கித் தந்தேன்

ஹோம் தியேட்டர்
ப்ளாஸ்மா டி வி

நான் குடும்பம் நடத்த ஒரு
கூடு கட்டிய கணக்கினும் அதிகம்
விஞ்சி நின்றது
பிஞ்சின் ஆசை
வெம்பவிடவில்லை

அரை நூற்றாண்டுச் செலவில்
இன்று ஆறாம் வகுப்பு
தலைமுறை இடை வெளி

Series Navigation