மரணக் கட்டைகள்!

This entry is part of 31 in the series 20060929_Issue

சி. ஜெயபாரதன், கனடா


அனுமார் வால்போல் ஆயுள் நீண்டாலும்,
சாவு மணியோசை முன்கேட்கும்!
வாலியின் முதுகைப் பிளக்கும்,
வெடி மின்னல்!
நொடிப் பொழுதில் மாறிடும்,
அவனியிலே
அஞ்சி அஞ்சி வாழும்,
மானிடமும், மரங்களும்!
பெட்டி செய்தாலும்,
வெட்டி எரித்தாலும்,
மனிதரோடு
மாய்வது,
மரங்களும்தான்!

****************

jayabarat@tnt21.com

[S. Jayabarathan (September 28, 2006)]

Series Navigation