கீதாஞ்சலி (69) வாழ்க்கை நதியின் பெருமை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


அதுவே என் வாழ்க்கை நதி,
பகலிர வெல்லாம்
குருதி யோட்டக்
குழல்களின்
வழியோடிச் சுற்றி வந்து
தாரணியில்
நர்த்தனம் புரியும்,
சீரிசைத் தாளத்துக் கேற்ப!
அதே அந்த வாழ்க்கை தான்
பூரிப்புடன்
ஆரவாரம் செய்யும்,
அளவற்ற அலைகள் போல்!
பூக்களும்,
புல்லின் கத்தி யிலைகளும்
பொங்கிடும் வாழ்வினில்
பூமித் தூசியாய்!

அதே அந்த வாழ்க்கை தான்
பிறப்பு, இறப் பெனப்படும்
கடல் மடித் தொட்டிலில்
தொடர்ந் தெழுகின்ற
அலைகளின் மட்டம்
ஏறி யிறங்கி,
ஓட்டத்தில்
ஆட்டப் படுகிறது!
உலக வாழ்க்கை என்னைத்
தழுவித் தொடுவதால்,
உடல் உறுப்புகள் அனைத்தும்
உன்னதம் பெற்றன,
பொன்னொளி புலர்ந்து!
யுகங்களில் பன்முறை
மீளும்
வாழ்க்கைப் பிறப்பின்
பெருமை எனது,
குருதியில் நெளிந்து
கூத்தாடும் இம்மையில்!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 17, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா