சூாியனின் சித்திரம்

This entry is part of 23 in the series 20051111_Issue

த.அகிலன்


ஒவ்வொரு பூவிடமும்
இருக்கிறது சூாியன்
குறித்த சித்திரம்.

பூக்களைத்தமக்குள்
பதுக்கிக்கிடக்கும்
மொட்டுக்களின்
முதுகுகளில்
எழுதப்படுகிறது
சூாியனின் தோல்வி.

பூக்களின் முகங்களில்
ஒட்டிக்கிடக்கிறது
சூாியனின் புன்னகை.

ஆனாலும்
இரவில்
நிலவுக்குப்பயந்து
அவற்றை
உதிர்த்துக்கொண்டு
தம்மை உாிக்கின்றன
மரங்கள்.

த.அகிலன்

Series Navigation