சொர்க்கத்துக்குச் சென்றது என் சைக்கிள் (ஒரு குழந்தைப்பாட்டு)

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

துக்காராம் கோபால்ராவ்


ஒருநாள் இறந்தது என்னுயிர் சைக்கிள்
வருமே அந்நாள் எனவே நான்தானும்
நினைத்ததுமில்லை நினைப்பும் தீதென்று

சர்க்கரம் உடைந்ததெனச் சொன்னார்
சங்கிலி போயிற்றென்று சொன்னார்
இடுப்பில் உடைபட்டே இரண்டாய்
பிரிந்தும் போயிற்றென்றே சொன்னார்

சைக்கிள்களுக்கெனவோர் மறுமையுண்டோ
இருக்கத்தான் வேண்டும் அதில் நிச்சயம்
சொர்க்கம்தான் அடைந்திருக்கும் என்னுயிர் சைக்கிள்
சொல்லாமல் சைக்கிள்கள்நரகம் போவாதிருக்கோணும்

சைக்கிள்களுக்கென்றோர் கடவுளுண்டோ
இருக்கத்தான் வேண்டும், அந்த கடவுளுக்கும்
இரண்டு சக்கரங்களும் ஒரு ஹாண்டில்பாரும்
தங்கத்தால் செய்திருக்கப்பட்டிருக்குமோ ?

சைக்கிள்கடவுள் என்னருமை சைக்கிளை
தராசில் நிறுத்து சொர்க்கத்துக்கு அனுப்புவாரா
தராதரமில்லையென்றே நரகத்துக்கு அனுப்பி
நல்லெண்ணெயில் வறுப்பாரா ?

இரும்பு சைக்கிளது, எண்ணெயில் வறுபடாது
மிக்க தீயில் உருக்கித்தான் இன்னொரு
சைக்கிள் செய்திடுவாரா அந்நரகத்தில்
அந்த சைக்கிளை எனக்குத்தந்தால்
அருமையாய் ஓட்டி சுற்றிடுவேன்

thukaram_g@yahoo.com

Series Navigation

துக்காராம் கோபால்ராவ்

துக்காராம் கோபால்ராவ்