கடலின் அகதி

This entry is part of 23 in the series 20050805_Issue

டான்கபூர்


உப்புத்திகளாய் ஆக்கிய உப்பு நீர்.
துறையில் ஒரு வீடு
ஒரு நாள்.
முனையில் ஒரு வீடு
ஓரு நாள்.
உள்ளுரில் உடன் பிறந்தோர் வீடு
ஒரு நாள்.
இன்றைக்கு,
ஊருக்குள் காளான் கொட்டில்களில்…
உப்புத்திகளாய் ஆக்கிய உப்பு நீர்.

அரிசி
மா
பருப்பு…
பசி அடக்கிய கதையாகியது.
உறையுள்ளின் கதை ஊரை மேய்கிறது.

அக்பர் கிராமத்துக்கும்.
அயர்ந்து எழ முடியாது.
மக்பூலியா புரத்துக்கும்
மயக்கம் தெளிந்துவிட இயலாது.
மதுரையின் பல கிளைகள் ஒடிந்தபடி கிடக்க…. ஏழையின் கண்ணீர் செல்கிறது. இடிந்த கட்டடங்களை நனைத்து…. துவைத்து.

பசி அடங்கிற்று.
பாசம் அடங்கிற்று.
அன்பு அடங்கிற்று.
ஆரவாரம் அடங்கிற்று.
உப்புத்தி வாழ்க்கை இன்னும் உவர்க்கிறதே.

யுத்தம் சப்பிப் போட்ட மிச்சங்களை
அலை மென்று விழுங்கியதாய்.
பசி அடங்கிய கதையாகியது.
உறையுள்ளின் கதை ஊரை மேய்கிறது.
நாளை யுத்தம் குரங்காய்ப் பாயுமா ?
நாளை சுனாமி அலையாய் சீறுமா ?

இங்கு காளான் கொட்டில்களில்….

டான்கபூர், இலங்கை

Series Navigation