பெண்மை

This entry is part of 26 in the series 20050722_Issue

பவளமணி பிரகாசம்


வானவில் வருகையிலே
வசந்தத்தின் காலையிலே
கன்னிப் பருவத்திலே
கனவில் மிதக்கின்ற
கல்லூரி காலத்திலே
வாசித்த தாகூரின்
கதையிதை சொன்னது:
புதிதாய் மணமானவளிடம்
மற்றொருத்தி கூறுவாள்
கணவனின் காலடியோசை
மனைவியின் காதுக்கு
அடையாளம் தெரியுமென்று-
தாம்பத்தியம் என்பதின்
நுணுக்கமான சூத்திரத்தை
சொல்லொணா சூட்சுமத்தை
அருமையான அதிசயத்தை
அன்று வியந்தவள்தான்
வியப்பின்னும் தீரவில்லை
உடல்கள் சேரும் உறவிலே
உணர்வின் ஆதிக்கம் அதிகம்
அனுபவம் தரும் விளக்கம்
துல்லிய ஞானம் பெண்மை
எஃகொப்பும் ஓர் மென்மை
ஒப்பிலாததன் மேன்மை

Pavalamani Pragasam
Pavalamani_pragasam@yahoo.com

Series Navigation