மதியழகன் சுப்பையா
—-
யாரும் என்னுடனில்லை
எல்லோருடனும் இருக்கிறேன் நான்
அவர்களுடன் இருக்கிறாய் நீ
உன்னுடன் அவர்கள்
யாருடனும் யாரும்
இருந்துவிட முடியுமா ?
யாரையும் யாரும்
பிரிந்துவிட முடியுமா ?
எல்லோருடனும்
எல்லோரும் இருக்கிறார்கள்
என்னுடந்தான் யாருமில்லை
நான் இருக்கிறேன் எல்லோருடனும்
—-
கோப்புகளுக்கிடையில்
பதிந்து கிடக்கிறதுன்
பார்வைகள்
கணிணியிலும்
காகிதங்களிலும்
ஒட்டிக் கிடக்கிறதுன்
தொடுதல்கள்
தொலைபேசியில்
சிக்கிக் கிடக்கிறதுன்
பேச்சொலிகள்
காதல் தொலைத்தாய்
காமம் தொலைத்தாய்
கண்களின் பீழையைப் போல்
மிக எளிமையாய்
அகற்றுகிறாய் என்னை
—-
இதுவரை
இப்படி பேசிக் கொண்டதே
இல்லை
இதுவரை
இத்தனை இடைவெளியில்
சந்தித்ததே இல்லை
இதுவரை
இத்தகையதோர் உறவு
இல்லை
எதுவரை
இப்படியே தொடரும் ?
அதுவரை
நிலைக்குமா இவ்வுறவு ?
—-
**
தொடர் வண்டி
—-
மழையில் நனைந்து
வெயிலில் காய்கிறது
நிறம் மங்கி
உருவம் சிதைகிறது
ஓடிக் கழைத்து
நிற்கிறது ஓரிடத்தில்
பகலில் கஞ்சாப்
புகை கக்கி
இரவில் முக்கி
முனகும்
அசைவதே இல்லை
என்றாலும்
அழகாய்த்தான் இருக்கிறது
பழைய தொடர் வண்டி.
**
பணிப் பழு
—-
தலைவலி எப்படியிருக்கு ?
எதாவது சாப்பிட்டுக்கோ
நல்லா தண்ணீர் குடி
பொறுமையா வேல பாரு
படபடப்பா இருக்காத
ரொம்ப வேலையாடா செல்லம் ?
அழைக்கையில்
சொல்கிறேன் நான்
அழைத்து சொல்கிறாய் நீ
இவ்வளவுதான் நம்
அன்பின் வெளிப்பாடு
தினமும் படுக்கையில்
சந்தித்து
படுக்கையில் பிரிந்து
கழிகிறது நம்
வாழ்க்கை.
மதியழகன் சுப்பையா.
மும்பை
**
மதியழகன் சுப்பையா
மும்பை
madhiyalagan@rediffmail.com
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2
- ஒரு கடிதம்
- வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]
- உங்கள் மூதாதையர் யார் ?
- கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- எனது எனச் சொல்லப்படுகின்ற….
- 3 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- புகழ்
- அமிழ்து
- கபடி கபடி
- பெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி
- காதலுக்கு மூட்டுவலி
- சூடான் – கற்பழிக்கும் கொள்கை
- திராவிட ‘நிற ‘ அரசியல்.
- நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.
- திருவண்டம் – 3
- சிறைவாசம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)
- குளங்கள்
- ரோஜாப் பெண்
- அம்மா
- இசட் பிளஸ்