கீதாஞ்சலி (21) நிரந்தரமாய்க் கண்மூடும் நேரம்! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உலக
மனிதர் தோன்றிய
கலகலப்பான அந்த திருவிழாவுக்கு
எனக்கு அழைப்பிதழ்
அனுப்பி நீ
வரவேற்பு அளித்திருந்தாய்!
உந்தன் ஆசீர்வதிப்பால்
எந்தன் பிறவி
முளைத்து
இவ்வுலகில் நானும் அவதரித்தேன்!
கண்களில் யாவற்றையும்
காண முடிந்திருக்கிறது!
காதுகளால் எதனையும் கேட்க
ஏதுவாக
இருந்திருக்கிறது!

திருவிழா விருந்தில்
இன்னிசைக்
கருவியை மீட்டு
கான மிசைக்க வேண்டியது
என் பொறுப்பாக அமைந்தது!
அப்பணியில் முற்பட்டு
என்னால்
இயன்றவற்றை எல்லாம்
முயன்று முடித்தேன்!
இப்போ துன்னைக் கேட்கிறேன்,
இறுதி வேளை வந்து
என்னுடல்
மண்ணுக்குள் முடங்கி
உன்முகம் காணும் போது நான்
ஊமை மொழியில்
தியானிக்கும்
தருணம் வந்து விட்டதா ?

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 1, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா