நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

விஜிலி


சகலதும் அந்நியப்பட்டு
மறைவதாய்
நமக்குள்ள பெரும் பிரமை

ஆனந்தமும் சுவாரஸ்யமும்
கனதிப்பட்டாலும்
ஆக்கிரமித்தலும்
நெருக்குவாரமும் இழுபடுவதாய்

நெஞ்சுமுட்டியது போலவே
மனது நிறைந்துள்ளது!
ஆனாலும்;
சில நொடியில் வெறுமைப்பட்டுவிடும்
ஊடல்;

வாய்ச் சவடலில் எல்லாமே
நிகழ்வுறினும்
நரம்புகளிலே முடிச்சிறுகியுள்ளது
மனிதாபிமானவுணர்வு !

நுனி நா வானில் வழியும் சகோதர
வாஞ்சை! ஆனாலும்
தேள் குத்தி எாிவதான நகர்தலில்
வெளிப்பசுமை !

கண்கள் கட்டப்பட்டு
தலை கிறுக்குதலில் காட்டினில்
விட்டதாய் உதறல் வாழ்வும்
சூன்யமும்!

எழுத்துக்களில் மனிதம் செதுக்கப்படுகிறது.
ஆக,
அவர்களில் இல்லை புனிதம்!

மண்குதிரைகளுக்கு
தீனிபோடுவதைவிடுத்து
மனத் தொழுவங்களையாவது இனி
செப்பனிடுவோம்!

ஓன்றுமட்டும் நிச்சயம்!
சந்தர்ப்பம் நிகழும்போதுதான்
ஒரு சுயசாிதை புறப்படுகிறது!
—-
விஜிலி , இலங்கை

Series Navigation

விஜிலி

விஜிலி