றகுமான் ஏ. ஜெமில் கவிதைகள்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

றகுமான் ஏ. ஜெமில்


முன்பள்ளி மாணவனும் மாலை வகுப்பும்.

ஏன் வீட்டு பிராணிகளுக்குண்டான
இருப்புக்கூட
எனக்கில்லாமல் போயிற்று
இந்த மாலை வகுப்புக்கள்
இங்கொன்றும் அங்கொன்றுமாய் சூழ்ந்ததில்.

இந்தப் பூனைக்குட்டிகள்
வண்டொன்றைப் பிடிப்பதும் விடுவதும்
பின் பிடிப்பதுமான
குறும்புத்தன அந்திகள் எனக்கில்லை.

அழுது அடம்பிடித்து
அம்மா அப்பாவோடு அள்ளுண்டு
பிராக்குகளினுாடு பயணித்து நாளாயிற்று
அட்டவணை வாழ்வாயிற்று.

தெருத் தெருவாய்
கூறிவிற்கும் பண்டங்களாயிற்று
அந்தக் கல்வியும்
முன்பள்ளியையம் விடுவதாயில்லை.

மாலை வகுப்புகள்
ஏங்களுக்கு சாத்தியமாயினும்
குருவித்தலையில்
பொிய பனங்காய் போன்றதே.

தவணைகள் அண்மித்தும
சுமைகளால் இழுபடும
ஒரு பெண்ணின் திருமணம்போல்
பள்ளிகளில் பாடங்கள்.

ஒரு நாட்டாமியின் கவிதை.

வுிலைவாசிகள் முகடுகளில்
குந்துதலில்
அவர்கள் ஊதியம்
மறுபடியும் மறுபடியும் பெருத்திற்று.

என் கொடுப்பனவு மட்டும்
வார்த்துப் போட்ட
பழைய இரும்புத் துண்டாய்
துருப்பிடித்து துருப்பிடித்து.

மீளவும் மீளவுமாய்
என் வியர்வை சுரண்டலில்
அவர்கள் வாழ்தல்
புன்னகைத்து புன்னகைத்து.

மூட்டைப் பூச்சிகள்போல்
ஏன் குருதி சப்புதலில்
அவர்கள் வாழ்வை அலங்காித்தல்
ஏங்கணம் தகும்.

கல்லில் நாருாித்து
இரண்டு வேளையுமாய்
கொதித்த என்னுலை
இனி ஒரு வேளை மட்டுமே.

—-
றகுமான் ஏ. ஜெமில்- இலங்கை

Series Navigation

றகுமான் ஏ. ஜெமில்

றகுமான் ஏ. ஜெமில்