புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

புதுவை ஞானம்


(கன்பூசியஸை அடியொற்றி)

பேரரசு முழுமைக்கும்
நன்னெறியை நிலைநாட்ட
விரும்பிய முன்னோர்கள்
முதலில் தங்கள் மாநிலத்தை நெறிப்பபடுத்தினார்கள்.
மாநிலத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முதலில் தங்கள் குடும்பத்தை நெறிப்படுத்தினார்கள்
குடும்பத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முதலில் தங்கள் ஆளுமையை நெறிப்படுத்திக்கொண்டார்கள்.
ஆளுமையை நெறிப்படுத்திக் கொண்டவர்கள்.
முதலில் தங்கள் இதயத்தை நெறிப்படுத்திக் கொண்டார்கள்.
இதயத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முதலில் தங்கள் சிந்தனையை நெறிப்படுத்தினார்கள்
சிந்தனையை நெறிப்படுத்த விரும்பிவார்கள்.
முதலில் தங்கள் அறிவை விரிவு படுத்தினார்கள்.
அந்த அறிவின் விரிவாக்கமே
அனைத்தையும் ஆராய்ந்து உணர்வதில்தான்….

அனைத்தையும் ஆராய்ந்ததனால்
அறிவு முழுமை பெற்றது.
அறிவு முழுமை பெற்றதனால்.
சிந்தனை தூய்மையடைந்தது.
சிந்தனை தூய்மையானதனால்
அறிவு நெறிப்படுத்தப்பட்டது.
அறிவுநெறிப்படுத்தப்பட்டதால்
ஆளுமை வளர்ந்தது
ஆளுமை வளர்ந்ததனால்
குடும்பம் நெறிப்படுத்தப்பட்டது.
குடும்பம் நெறிப்படுத்தப்பட்டதனால்
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டது.
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டால்
பேரரசு முழுமைக்கும்
அமைதியும் மகிழ்ச்சியும் நிலவியது.

மூலம் : கன்ப்யூசியஸ், சீனா

தங்கள் அன்பன்,
புதுவை ஞானம்

2005 The New Year – message
– From Puduvai Gnanam –

The ancients who whished to demonstrate illustrious virtue throughout the Empire first ordered well their own states. Wishing to order well own states, they first regulated their families. Wishing to regulate their families, they first cultivated their persons. Wishing to culltivate their persons, they first rectified their heartrs. Wishing to rectify their hearts, they first sought to be sincere in their thoughts Wishing to be sincere in their thoughts, they first extended to the utmost their knowledge. Such extension of knowledge lay in the investigation of things.

Things being inverstigated, knowledge became complete. Their knowledge being complete, their thoughts were sincere. Their thoughts being sincere, their hearts were then rectified. Their hearts being rectified, their persons were cultivated. Their persons being cultivated, their families were regulated. Their families being regulated, their states were rightly governed. Their states being rightly governed, the whole Empire was made tranquil and happy.

-Confucius, The Great Learning

BEST WISHES FOR A HAPPY NEW YEAR

– Puduvai Gnanam

puduvai_gnanam@rediffmail.com

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்