வேடத்தைக் கிழிப்போம்-6 (தொடர் கவிதை)

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பனசை நடராஜன்


வளமான நிலமென்றால்
பலத்தாலே வெல்லும்,
இளம்பிள்ளை எளியோரைக்
கணைவீசிக் கொல்லும்,
கலமேறித் தலைகொய்யத்
தொலைதூரம் செல்லும்,
வளர்கின்ற நாட்டுக்குள்
கலகமிடச் சொல்லும்,

அத்துமீறலும், ஆக்கிரமிப்பும்
அப்பட்டமாய் நடந்தும்
ஆதாயம் இல்லையெனில்
பாராமுகம் காட்டும்..
பச்சோந்தி “வல்லரசுகள்”!

பொல்லாங்கு புரியும் இந்த
வல்லோர்க்கு எல்லோரும்
வளைந்திடும் நிலையாலே
கள்ளுண்ட கயவர் போல்
தள்ளாடும் நியாயங்கள்!!

உள்ளத்தில் மனிதர் மேல்
நல்லன்பு உள்ளோர்கள்
வல்லோராய் வளர்ந்தால்தான்…

கலகமில்லா உலகம் தோன்றும்!
வளங்களெல்லாம் செழித்து ஓங்கும்!!
சமத்துவமும், ஒற்றுமையும்
தலைநிமிர்ந்து தழைத்து வாழும்!!!

(தொடரும்)

-பனசை நடராஜன், சிங்கப்பூர்.-
(feenix75@yahoo.co.in)

Series Navigation

பனசை நடராஜன், சிங்கப்பூர்

பனசை நடராஜன், சிங்கப்பூர்