வதங்கள்

This entry is part of 54 in the series 20040722_Issue

திலகபாமா


நாவுகளால் பின்னப் படும்

வார்த்தை வலைகள்

வலைகளின் கூறுக்கே நான்

நடப்பது பற்றி கவலை கொள்ளும் நீ

சிரிப்பின் நினியில்

விரல் மடித்து

முஷ்டி உயர்த்தும் வன்மம்

கூராய் பூசியிருப்பதை

எனை தீண்டும் கண்களுக்கு

பார்க்கக் கிடைக்கும் நொடியில்

வழியும் இரத்தம்

உதடு நனைத்து கழுத்து கீறும்

கட்டிய கைகளின் பின்

உயர்த்தும்

ஆயுத கைகள்

வயிற்றை கிழிக்காது

எனை தின்ன நினைத்த

குடல் உருவிப் போடும்

பயம் கொண்டொதுங்காது

பாசம் கொண்டு நெருங்க

சாத்தியமாகையில்

செத்துப் போகிறான் என்முன்

ஒவ்வொரு ஆணும்

—-
mathibama@yahoo.com

Series Navigation