தமிழவன் கவிதைகள்-ஒன்பது

This entry is part of 48 in the series 20040610_Issue

தமிழவன்


நெரிசல் ரயில்
நேற்று முன்தினம் வார்சாவில்
ஒரு முதியவளைக் கண்டேன்
பாலகனை ஏந்தி.

பாலகன் நீலக்கண்கள்
வானம் நோக்கி

இதயத்தோடு உரையாடியபடி
இருந்தாள் அவள்
மொழியேதுமின்றி.

குழந்தை அழக்கூடாதே
என பயந்தேன்
உருவமற்றவைகளைக் கண்டு

ரயில் கடந்துகொண்டேபோனது
பல நிறுத்தங்கள்.

திரும்பிப் பார்க்கையில்
நெரிசல் இல்லை
குழந்தையும் மூதாட்டியும்
இறங்கிவிட்டிருந்தனர்.

தூரத்தில்,
எனினும் தெரிந்தது எனக்கொரு வானம்.

Series Navigation