போய்வருகிறேன்.

This entry is part of 60 in the series 20040429_Issue

பாரிஸ் அகிலன்.


பரம்பரைகளின் உயிரியல் ஞாபகங்களைப்
பதிந்து காவிச் செல்லும் ‘நான் ‘ எனும் தனிமம்
தன்னைப் புனரமைத்து முன்னனுப்பும்
முனைப்பில்…

மரபணுப் பரம்பலை மட்டுமே இரகசிய
இலக்காய்க் கொண்டலையும் உயிர்களின் இருப்புகளில்,
இருப்புகளின் தொடர்ச்சியில் இருப்பதைக்
காணவேண்டியொரு யாகம் மட்டுமாய்…

ஓரு கணமுதிரும் தீவிர விழிப்பில்
ஓடாதிருக்கும் காலத்துள் நித்தியம் காணும்
உள்விழிகள் அகல விரிந்து கண்டதைக் கூற
அலறலை மட்டுமே மொழியாய்த் தேடும் அவலத்தில்…

புயலெழுந்தார்ப்பரித்து ஆசைகளின் வேர்களை
அறுத்தெறிந்து மரத்தைச் சாய்த்து மண்ணில்வீழ்த்த
வேரறுந்து வெந்த நம்பிக்கைககளின்
அடித்தளத்தில் அனைத்தும் மாயையாக…

கரைத்துக் கரைத்து எனை மீண்டும்
அந்த மூல வஸ்துவிடம் கையளிக்க வேண்டும்
எனும் உன் விளையாட்டில் இத்தனை தாமதமேன்
காலமே, காலமே, காலமே !

Le 24 mars 2004.

velanayan@hotmail.Com

Series Navigation