விழிமீறல்

This entry is part of 60 in the series 20040429_Issue

மனஹரன், மலேசியா


எனக்குங்தெரியாமலே

உனிதயத்தை வருடிய மெய்க்காற்று

எனது மூச்சுதானெப்பாடிய

உன்னையும்

நேச வத்தியேந்திவரும்

உனது மென்கரஸ்பரிசத்தை

எப்படித்தான் தூர விரட்டுவேனோ ?

நேர்வெம்மையில்

முகங்கறுக்கும் அனலுக்குள்

மெல்லிய கீறலாய்

அகத்தையும் மறந்து

புன்னகை கயிற்றை வீசிச்

செல்லுமுன் உடம்பின்

நரம்பினுள் சிக்கியிருந்தவனுக்கும்

அதிராமல் அலையவிட்ட

சீறும்பார்வையை விதைக்காமல்

அள்ளிச்சென்றதும்

செம்மண்வாசத்தையும்

வளியையும்

விலகிச்செல்லவிடாமல்

இறுக்கமாய் சிக்கவைத்த

சாட்சி பொருள்களாய்

உடைந்து தெரிக்கும்

எச்சில்துளிகளைச்

சேகரிக்கும்

உன் தேக உறுப்புகள்

சிலிர்ப்புக்குள்

தேடி வைத்துக்கொள்ளும்

இமைச்சிப்பிக்குள்

சவம்கொண்ட

நீர்த்திவளைகளை

நகக்கண்ணால் கிள்ளியெடுக்கும்

விடுபட்ட இடைவெளிக்குள்

புன்னகை விடைபிளந்து கொடுக்கும்

ஒழுகிவிழும் உயிரீரத்தின்

விம்மிவிடும் சப்த நோவுகளில்

சிறைபட்ட கனவாய்

முடிச்சவிழ்த்த விம்மலாய்

ஓரோரத்தில் மெளனங்கொண்டு

காத்திருக்கும்.
—-
kabirani@tm.net.my

Series Navigation