சான்ாீஸ் மலை அழகி

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

ரவி(சுவிஸ்)


சான்ாீஸ்!

கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்

கூந்தலாய் முகில் விாித்து
உச்சி வழிந்து
முகம் மறைத்து ஏமாற்றினாய்
எனை
சென்ற தடவை.

இறுமாப்பின்றி
உட்கார்ந்திருக்கிறாய்
இன்று நீ.
வானத்தை அதன்
எட்டா இருப்பிலே
விட்டுவைத்த பணிவு
இன்று உனக்கு.

நீலம் பாாித்திருக்கிறது வானம்.

காட்சிகளைக் கோர்த்துக் கோர்த்து
பார்வையைக் கோதுகிறாய்.
ஒரு சினிமாக்காரனின் கமராவிற்குள்ளோ
கம்பியூட்டர் புனைவுக்குள்ளோ
அகப்படாத நீ
பூச்சுகளற்று
ரம்யமாய் என்
கண்வெளியில் பரவுகிறாய்.

அகதிப் பாடலுடன் உனை
முதன்முதல் சந்தித்தேன்
பதினான்கு ஆண்டுகளின் முன்.
பாடலின் சோகம் துடைத்து எனை
ஒற்றிக்கொண்டாய்.
உச்சியை மோந்து நின்றேன்.
உறவுகொண்டேன்.
மனிதர்கள் அறியார் என்
கவி மனசு ஆழம்.
ஊடுருவிப் பரவினாய் நீ
இயற்கையின் கோலமாய்.

காலை கதிரவனின் முதல் கதிாிலிருந்து
மாலையை முடித்துவைக்கும்
இறுதிக் கதிர்வரை
உன் காட்சி நீளும்.
என்றிருந்த போதிலும்
நிலவின் ஒழுக்கில்
கருமை போர்த்து
நிமிர்ந்து நிற்பாய்.
நிறங்கள் கண்டிய முகில் திரள்களிடை
இருளும் கலைய மறுக்கும்
அமைதிச் சமுத்திரத்தில்
உறக்கம் கொள்வாய்.

வானம் வந்து
வெண்பனி கொட்டி – உனை
சிற்பமாய் வடிக்கும் பனிக்காலமதில்
ஓவியமாவாய்
தரைக்கும் வானுக்குமிடையில்.

இப்படியாய் தொடரும் உன்
காட்சிநீள் வாழ்வை
காண நான்
மீண்டும் மீண்டும் வருவேன் –
தனியாகவோ
நட்புகளுடனோ.

கோலம் கொள்
கொள்ளை கொள்ளையாய்!

-ரவி(சுவிஸ்)

(குறிப்பு: சுவிஸிலுள்ள அழகிய மலைகளில் சான்ாீஸ் மலையும் அறியப்பட்ட ஒன்று. 2500 மீற்றருக்கும் அதிகமான உயரமுள்ள இந்த மலையின் காட்சிமாறும் தன்மையின் அனுபவ வெளிப்பாடே இந்தக் கவிதை)

rran@bluewin.ch

Series Navigation

ரவி, சுவிஸ்

ரவி, சுவிஸ்