அனைத்தும் ஒன்றே !

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

ஜடாயு


கண்களின் காணல்களைக் காணும் கண்கள்
செவிகளின் கேட்டல்களைக் கேட்கும் செவிகள்
வாயின் வார்த்தைகளை வழங்கும் வாய்
நாசியின் நுகரல்களை நுகரும் நாசி
உடலின் உணரல்களை உணரும் உடல்
மனத்தின் நினைப்புக்களை நினைக்கும் மனம்
அறிவின் அறிதலை அறியும் அறிவு
சித்தத்தின் சிந்தனைகளை சிந்திக்கும் சித்தம்
உயிரின் உயிரை உயிர்விக்கும் உயிர்
அனைத்தும் ஒன்றே.

இமயச் சிகரத்தின் மணிமுடியில்
இரைந்தோடும் பேராற்றில்
சுழன்றடிக்கும் சூறைக் காற்றில்
நீலவானில்
ஆழ்கடலில்
பிரபஞ்ச வெளியில்
எங்கும் எங்கெங்கும்
இயற்கையின் இருப்பு ஒன்றே.
அனைத்தும் ஒன்றே.

சோகம் சுகம்
வீரம் கோழைத்தனம்
கண்ணியம் கயமை
வெறுப்பு விருப்பு
இருப்பு இறப்பு –
இருமைகளின் பின் இயங்கும்
மானுட இயல்பு
ஒன்றே.
அனத்தும் ஒன்றே.

அவனுக்குள் உள்ள அவன்
அவளுக்குள் உள்ள அவள்
அதற்குள் உள்ள அது
உனக்குள் உள்ள நீ
எனக்குள் உள்ள நான்
அனைத்தும் ஒன்றே.
***
(c) ஜடாயு (jataayu@hotmail.com)

Series Navigation

ஜடாயு

ஜடாயு