உறைந்த இரத்தங்கள்

This entry is part of 35 in the series 20021207_Issue

இரா. சீனிவாசன்,தைவான்


வான விளக்கெல்லாம்
வலுவிழக்கும் வேளையிலே
தீனக்குரலொன்று
தீய்ந்துபோய் வந்தது

அன்னையே விட்டுவிடு
என்னை மட்டும் விட்டுவிடு
தப்பித்துப் போனால் – நான்
எப்படியோ பிழைத்திடுவேன்

ளிகாஞ்சல் மழலை ஒன்று
ளிகஞ்சலாய்க் அகவையிலே
வஞ்சியின் குரலொன்று
வறண்டுபோய் வந்தது

வாட்டும் வறுமையடா
வாழ்வெங்கும் சிறுமையடா

காட்டு மிருகந்தனை
கணவனாய்க் கரம்பிடித்தேன்
கரம்பிடித்த நாள்முதலாய்
சிரமங்கள் பல பட்டேன்

தூக்கம் என்பதை நான்
தூளியில்தான் அனுபவித்தேன்
தூக்கம் கூட எனக்கு
ஏக்கமாய் ஆனதடா

நா க்குச் செத்துப் போய்
நாள் பல ஆனாலும்
போக்கற்ற வயிற்றுக்கு
வெறும் கூ ழும் வேண்டாமோ ?

பக்கத்து வீடெல்லாம்
பட்டுடுத்திப் பார்க்கையிலே
வேதனையை மறைப்பதற்கு
வெறும் சேலை வேண்டாமோ ?

மாற்றானின் மஞ்சத்தில்
மனைவியாய்ப் படுக்கச்சொல்லிக்
கூற்றுவனாய்க் குரைக்கின்றான்
குடிகாரன் உன் தந்தை

விற்றுக் குடித்து விட்டு
விலைமாதை அடைவதற்கு
சுற்றிக் கரம்பிடித்த
சுமங்கலியை அடகு வைப்பான்

ஓ பிரம்மனே
இந்த உலகினில்
இனியொரு பிறப்புண்டேல்
சுற்றிலும் ப ணம் குவித்து
சுமையின்றி இறக்கிவிடு

இவ்விதமாய் அங்கே
இளைய தாயொருத்தி
சங்கடங்கள் அனைத்தையும்
சலிப்புடனே கொட்டிவிட்டு

பச்சிளம் பெண் மகவை
பாழ் கிணற்றில் தள்ளிவிட்டாள்
அச்சமாய் என்றிருந்த
ஆண் மகவும் உள்போக
துச்சமாய் வாழ்வெண்ணி
துணிவுடனே தான் குதித்தாள்

***
amrasca@netra.avrdc.org.tw

Series Navigation