தேடிய அமுதம்

This entry is part [part not set] of 30 in the series 20020610_Issue

திலகபாமா


எமை தின்ன நினைக்கும் சமூகம்
தினம் தினம் தின்றும்
தீராது பசியென
வயிறுதடவும்
எப்போதும் என் பாதைகளைத்
திருத்துவதாய் சொல்லியே
என் தீர்மானங்களைத் திருடி
தன் தீர்மானங்களைத் திணித்திருக்கும்
என் பாதையில் நெருஞ்சிகளாய்
பூத்திருக்கும்
என் பயணமோஒளியாய்
பால்வெளிகள்தாண்டி
எந்த மலையும் மடுவும்
தீர்மானிக்க இயலாததாய்
உதவி புரிவதாய்
ஊமைக் கள்ள கண்ணன்கள்
ஓரடிப் பழம் உயர
ஒளிக்காது என் மனம் பேசச் சொல்லும்
அடுத்து என்ன வரும்
அறியாது எனை கடையும்
தேவர்களும் அசுரர்களும்
நானே அமுதம் என்றறியாது

***
mahend-2k@eth.net

Series Navigation

திலகபாமா

திலகபாமா