பனிக்கட்டிச் சிறகுகள்.

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

சேவியர்.


ஆணவம்,
அது
அழிவிற்கான அழைப்பிதழ்.

காளான் குடையை
பட்டாபிஷேகமாய் பாவிப்போாின்
வறட்டுக் கெளரவ
வடிகால்கள்.

அகந்தைக் கடையில்
இலவசமாய்
வினியோகிக்கப்படும்
வோில்லா நிலக்கடலைச் செடிகள்.

நான் என்னும்
தற்பெருமைக் கழுவின்
தற்கொலை வாாிசுகளே
இந்த
ஆணவத்தின் எஜமானர்கள்.

கடலைப் பார்த்து
உப்பளம் சிாிப்பது போல,
சூாியக் குடும்பத்துக்கு
தீப்பெட்டி ஏற்றுமதி செய்வது போல,
அயலானின் மீது
ஆணவம் உமிழும்.

தாழ்மை இதயத்தை
பலகையில் அறைந்து,
ஆணவம் பல கைகளோடு
அவதாரமெடுக்கும்.

ராவணத் தலையாய்,
வெட்டிய இடத்தில்
வெடுக்கென்று முளைக்கும்.

ஆணவம்,
அது தலையைக் கொய்து
கிாீடம் சூட்டும்,
சமாதானத்தை நறுக்கி
சவப்பெட்டியில் போடும்.

தாழ்மை
வாழ்வுக்கான திறவுகோல்,
ஆணவம்,
அழிவிற்கான ஆவணம்.

அமைதியின் இதயம்
முட்களை பிடுங்கிப் போடும்,
ஆணவத்தின் சுத்தியல்
ஆணிகளை அறியும்.

நம் பாதத்துக்குத் தேவை
காலணிகளே,
கால் ஆணிகளல்ல.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்