தைமகளே! காக்க வருக,வருகவே!

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

(கவிமாமணி வேதம்)


மார்கழிப் போதினில், நூலுக்கு முன்னுரை
..மாதிரி மாமழை கொட்டினையோ ?-தை
சோர்ந்துபோய் வந்திடில் பாட்டு வராதெனச்
..சூக்கும நாட்டியம் காட்டினையோ ?-(ஒரு)-

தைமகள் விண்ணில்நீ வான்மகள் கைபற்றித்,
..தங்கத் தமிழிசை பாடினையோ ?-அதன்
மெய்ம்மைபொ லிந்திசை சென்னையில் நீண்டுமே
..மென்மேலும் பள்ளமாய்க் கூடினதோ ?

மஞ்சளாய் வந்தேஎம் கன்னியர் கன்னத்தில்
..மாபெரும் வெட்கம் கொடுப்பவளே!-உன்றன்
கஞ்சம லர்ப்பதம் ‘iஇஞ்சி ‘போ லேகண்டேன்,
..கவிமலர் தூவித் தொழுதுவிட்டேன்!

கரும்புக்குள் ளேஉன்றன் மன்மத வில்லினைக்
..காளையர்க் கென்றே தொடுத்தனையோ ?-அதை
மருங்கிலே கட்டியே, ‘பொங்கல் ‘ குலவையில்
..மனத்தையே பெண்ணிடம் தந்தனரோ ?

எப்படி ஆயினும் iஇவ்விலை வாசியில்
..ஏரைப் பிடித்தவன் பொங்கல்வைத்தான்!- ‘கதிர் ‘
தப்படி போட்டுமே சட்டத்தைக் கொல்வோரைத்
..தானே பொசுக்கிடக் கூவிவைத்தான்!!

தோளில் சுமந்துபல் தீவிர வாதங்கள்
..தோன்றிஎம் நாட்டைக் கெடுக்குதையே!-அடி!
காளியாய் உன்னைவ ணங்கினேன் ‘தை ‘யேநீ
..காத்திட வேணுமே எங்களையே!

***
(வேதம்)08-01-02

Series Navigation

(கவிமாமணி வேதம்)

(கவிமாமணி வேதம்)