பாரதி மன்னிக்கவும்!

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

கு.முனியசாமி


ஆதியிலே சாதியில்லை நந்தலாலா – அது
பாதியிலே வந்ததென்ன நந்தலாலா
வீதியிலும் சாதியப்பா நந்தலாலா – அந்த
வேதத்திலும் சாதியப்பா நந்தலாலா…

பிள்ளையென்றும் தொல்லையென்றும் நந்தலாலா – நம்மை
பிாித்துவைத்த சேதியென்ன நந்தலாலா
பல்லனென்றும் கள்ளனென்றும் நந்தலாலா – எம்மை
பகுத்துவைத்த பாவமென்ன நந்தலாலா…

செட்டியென்றும் தொட்டியென்றும் நந்தலாலா – நம்மை
சிதைத்துவிட்ட கோலமென்ன நந்தலாலா
இரத்தமெல்லாம் சிவப்புதானே நந்தலாலா – அதிலும்
நாலுவகை வந்ததென்ன நந்தலாலா…

மாடுகூட தம்மினத்தை நந்தலாலா – நம்போல்
மறுப்பதில்லை வெறுப்பதில்லை நந்தலாலா – நாம்
மனிதரென்று சொல்வதெப்போ நந்தலாலா – அதற்கு
மறுபடியும் பிறக்கனுமா நந்தலாலா…

Series Navigation

கு முனியசாமி

கு முனியசாமி