This entry is in the series 20010408_Issue

கோகுல கிருஷ்ணன்.


பூக்களோடு

பேசப் பிடிக்கும் எனக்கு.

அலுவலகம், பணம்,

நான், நீ,

அவன், அவள்,

சினிமா, கிாிக்கெட்,

காதல், காமம்,

ஊழல், கூட்டணி,

நம்பிக்கைகள், கொள்கைகள்

இவைகள் ஏதுமற்று

மணம் மட்டுமே நிரம்பிய

மலர்களின் பேச்சை

மெளனமாய் ரசித்திருப்பேன்.

அவ்வாறே

என் பேச்சை

புன்னகையோடு

பூக்களும்.

Series Navigation