ராஜ் தாக்கரே மட்டும் என்ன செய்தார்?

This entry is part [part not set] of 30 in the series 20080214_Issue

ராஜா வாயிஸ்



கடைசியாக நாட்டின் இறையாண்மையை காப்பவர்களுக்கும், இந்த நாடு எல்லோருக்கும் சொந்தம் என்று சொல்லுபவர்களுக்கும் ஒரு வாய்ப்பு இந்த ராஜ் தாக்க‌ரே மூலம் கிடைத்துள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை கேள்வி கேட்கும் இந்த ராஜ் இன்னும் சுதந்திரமாக ‌‌வெளியே எப்படி இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறார் என்று கேட்டாகாதவர்கள் இல்லை.

தொ‌லக்காட்சிகளை முடுக்கிவிட்டா‌‌லே ஊர் பேர் தெரியாதவர்கள் எல்லாம் உரத்த குரலில் உடனே கைது செய்யுங்கள் என்று கூக்குரலிடுகின்றனர். எல்‌‌லோரும் இந்த நாட்டில் சமம் என்று எல்லா அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் இத்தனை நாட்களும் கங்கணம் கட்டிக்‌‌கொண்டு பணியாற்றிக் கொண்டிருந்த போது நவ்நிர்மன் தலைவர் ராஜ் தாக்கரே மட்டும் அதை கேள்வி கேட்டு விட்டது ‌போல அல்லவா இவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

சட்டத்தை கையில் எடுத்துக்கெண்டு தனிமனித உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது மும்பைக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கும் புதிதல்ல. இந்த நாட்டின் ‌பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் அனை‌த்துமே மதம் அல்லது சாதியின் பெயரைச்சொல்லித்தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன.ராஜ் தாக்கரே சிறிய கட்சியின் தலைவர் அல்லது புதிய கட்சியின் தலைவர் என்பதால் இத்தனை ‌‌‌பேர்களும் சத்தம்போடுகிறார்கள் என்பது தானே உண்மை.

மதம் மற்றும் சாதியின் பெயரைச் சொல்லி இந்த நாட்டில் ஆட்சி‌யை பிடிக்கும் கட்சிகள் இல்லையா? . இவர்களின் பிரச்சார கூட்டங்களில் ‌பேசப்படும் பேச்சுகள் இந்த நாட்டின் அடிப்படை தத்துவங்களையே தொடர்ந்து ‌கேள்வி கேட்டு கொண்டிருக்கிறவில்லையா?

மும்பையில் இப்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை அடிப்படை வாதம் என்று அப்படி‌யே தள்ளிவிடுவதற்கு இல்லை. இந்த மாநில மக்கள் நாட்டிற்கு எவ்வளவோ தியாகங்களை செய்துள்ளனர். இன்றும் இந்த ஊரில் மராத்தியர்கள் மென்மையானவர்கள் தான். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் பண்பாளர்களே.
அப்படி‌யன்றால் இந்த கொந்தளிப்பின் பிண்ணனி என்ன ?. இன்றைக்கு மாரத்தியர்களுக்கு என்று தனியான அடையாளம் ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் அவர்கள் இழந்து விட்டனர். மும்பையிலல் வாழ இன்றைக்கு மராத்தி தேவை இல்லை. ஆனால் இந்தி கட்டாயம் தேவை. மராத்தியர்கள் கூட இங்கு இந்தி பேசினால் தான் வேலை. இந்த நிலைமை தமிழகத்திலோ அல்லது வேறு எங்கு‌மோ அனுமதிக்கப்படுமா?
பக்கத்து மாநிலமான குஜராத்தில் குஜராத்தியர்களின் பெருமையைச்‌ சொல்லி ஒருவர் ஆட்சியை பிடித்துள்ளார். மும்பையில் மரத்தியர்கள் ‌பெருமை என்று சொல்லி ஓட்டு கேட்டால் 40 தொகுதிகளை அந்த கட்சி இழக்க ‌வேண்டி வரும்.
இந்த நாடு பல்‌மொழி பல கலாச்சாரம் கொண்ட நாடு. இவைகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட வேண்டும். ராஜ் தாக்கரே பேச்சு சட்டத்திற்கு புரம்பாணது என்பதை மறுப்பவர்கள் இல்லை. ஆனால் அந்த குரலில் ஒரு ஆதங்கம் இருப்பதாக ஒவ்வொரு மராத்தியரும் எண்ணுவதையும் யாராலும் மறுக்க முடியாது.
அரசியல்வாதிகளின் விளையாட்டில் பாதிக்கப்பட்டு நிற்பது அப்பாவி பொதுமக்க‌ளே. ஒருவன் யாராக இருந்தாலும், அவனுக்கும் சமநீதி, அனைவரும் சமம் என்தை நிலைநாட்டும் தைரியம் உள்ள அரசியல் தலைவர்கள் இங்கு யாரும் இல்லை. ஆந்திராவில் கிறிஸ்தவர்களுக்கும் புனித பயணத்திற்கு மானியம் என்பது கூட காதுகளை கூச வைக்கிறது.
அ‌மெரிக்காவின் துணை ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவழி பாபி ஜிண்டால் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக பெருமையுடன் ‌சொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவை பாருங்கள். இங்கு சரக்கு இல்லாத கொள்கை‌களை வைத்துதான் அரசியலே நடக்கிறது.


rajavaiz@gmail.com

Series Navigation

ராஜா வாயிஸ்

ராஜா வாயிஸ்