சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா?

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

கூத்தாடி


சதாமின் மரணம் ஒரு பழிவாங்கல் மட்டுமா?

சதாம் தூக்கிலபட்டது பற்றி அறிவிக்கப் பட்டவுடன் அவரைப் பற்றிய தொலைக்காட்சியில் தொடர்ந்து வரும் விவாதங்களையும்
தொடர்ந்து பார்த்த போது தோன்றியவைப் பற்றிய ஒரு அவசரப் பதிவு .

தூக்கிலடப்பட்ட சதாம் ஒன்றும் புனிதர் இல்லை ,அவர் செய்த அரசியல் கொலைகள் கணக்கிலடங்காதது .அதற்கான
தண்டனைதான் இது ,அது நியாயத்தின் தர்மத்தின் வெளிப்பாடு என்று எடுத்துக் கொள்ளலாமா ?

அப்படித்தான் அவரால் பாதிக்கப் பட்ட ஷியாக்கள் இராக்கில் சந்தோசாமாகக் கொண்டாடுகிறார்கள் .பாதிக்கப் பட்ட மக்களிடமிருந்து
அப்படிப் பட்ட கொண்டாட்டங்களைத் தான் எதிர்பார்க்க முடியும் .

மாறாக ,யார் தான் கொல்லவில்லை ,புஷ் கூடத் தான் இராக்கில் கொல்கிறார் ,அவரும் தண்டிக்கப் படுகிறவரே ? என்று அவர் மேல் ஒரு தியாகிப் பட்டத்தையும் ,அமெரிக்காவை எதிர்த்ததாலேயே அவர் செய்த தவறுகளை மன்னிக்கத் தயாராக இருக்கும் பார்வையும் உண்டு.

இந்த இரண்டு பார்வைகளும் தவறானவை என்றேப் படுகிறது .சதாம் ஒன்றும் புனிதர் அல்ல ,அவர் தண்டிக்கப் பட வேண்டியவரே ?
தூக்குத் தண்டனை நாகரிக உலகில் தேவையில்லாதது என்ற கருத்தாக்கம் கொண்ட நான் அவர் தூக்குத் தண்டனையை ஆதரிக்க
முடியவில்லை.

குர்திஷ் மக்களுக்கு அவர் பண்ணிய தூரோகம் மன்னிக்க முடியாதது தான் ,என்றாலும் இன்றைய சூழலில் அவர் கொல்லப் பட்டது
பழிக்கு பழி வாங்கும் மோகமும் ,ஷியா /சுன்னி அரசியலும் தான் .

சதாம் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் எங்காவது அடைக்கலம் வாங்கி தப்பியிருக்கலாம் ,அவர் முட்டாளாகவும் ,மாறி வரும்
உலகச் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமதுமே அவரின் முடிவுக்குக் காரணம் .ஜோசப் ஸ்டாலின் விசிறியும் ,அவரைப் போலவே
ஆள முயற்சியும் செய்த சதாம் ஸ்டாலின் இந்தக் காலக்கட்டத்திற்கு ஒத்து வராதவர் என்பதை உணரவில்லை.

சோவியத் விழுந்தப் பின்னரும் உணராதது அவர் கண்ணை மறைத்த அதிகார வெறியும் அளவு கடந்த நம்ப்பிக்கையும் தான் .

அவர் ஆண்ட போது ஒடுக்கப் பட்ட ஷியாக்கள் இன்று அரசில் பலம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.இராக் பிரதம மந்திரி அலுவலகம் முழுக்க முழுக்க ஷியாக்களின் ஆதிக்கத்தில் தான் இருப்பதாக வந்த செய்திகள் வரும் நாடகளில் இராக்கில் இனக்
கலவரங்களைத் தான் கொண்டு வரும். சுன்னிக்கள் பழிவாங்கவேப் படுவார்கள் . இராக் மக்களுக்கு விடிவு காலம் அருகில்
இல்லை எனத் தான் படுகிறது.

மேலும் சதாம் மேல் நட்ந்த விசாரணை கேலிக் கூத்தாகத்தான் இருந்தது.சதாமுக்கு ஆஜரான வக்கீல்கள் கொல்லப் பட்டதும் ,நீதிபதிகள் மாற்றப் பட்டதும் ,நீதிபதிகளின் தனிப்பட்ட கோவங்களும் விசாரணையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குவது.நீதிபதிகள் கூட அமெரிக்கர்களிடம் தான் இரண்டு வாரம் crash கோர்ஸ் எடுத்துக் கொண்டார்களாம் .

சதாம் தூக்கிலப் பட்டதில் நேரடி சம்பந்தம் இல்லாதது போல் புஷ் விட்ட அறிக்கை இன்னுமொரு கேலிக் கூத்து.

மேலும் ஏன் இந்த அவசரம் என்றும் புரிய வில்லை ,2006க் குள் முடித்து விட வேண்டும் என எண்ணி இருப்பார்கள் போல.அதுவும் இன்று ஏதோ சுன்னி ஈத் திருவிழா என்றும் CNN இல் சொன்னார்கள்.அதில் எதாவது அரசியல் இருக்குமா என்றுத் தெரியவில்லை.

என்னுடையப் பார்வையில் சதாமே இன்னும் கொஞ்ச நாட்களில் இறந்திருப்பார் ,வயசு 69 ,எத்தனை நாள் தான் இன்னமும் இருப்பார்.அதுவும் 35 வருடங்கள் ராஜாவாக இருந்த்தவர் ,ஒரு சாதாரணச் சிறையில் சாதாரணக் கைதியாக அவரை நடத்தி இருந்து அவர் பலருக்கு மறுத்த உயிர் வாழ்வதற்கானக் கருணையை அவருக்கு அளித்து ,யாருமே இல்லாமல் பிள்ளைகளும் இறந்த ஒருவர் வாழுவதின் வலியை உணர்த்தியிருக்கலாம். அமெரிக்கப் போன்ற நாடு நினைத்திருந்தால் இதைப் பண்ணியிருக்க முடியும் .சதாமின் சாவு இப்படி ஒரு விடயமாய் உலக மக்களுக்கு அவர் மேல் ஒரு சாப்ட் கார்னரை உண்டாக்காமல் ஒரு சாதாரணமாய் இருந்திருக்கும்.அதுவே அவருக்குத் தேவையானத் தண்டனை .இப்போது கொடுத்தது உலகத்தின் பார்வையில் பழி
வாங்கலாகவும் ,கண்டிக்கப் படுவதாகவும்த் தான் பார்க்கப் படும்.

வரும் காலங்களில் சுன்னிக்களும் ,ஷியாக்களும் அடித்துக் கொள்வது அதிகமாகலாம்.அமெரிக்கர்கள் சீக்கிரம் வெளியே வர
வேண்டியதன் அவசியம் அமெரிக்க மக்களின் நவம்பர் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிவதால் ,பிரச்சினைகள் அதிகமாகவே
ஆகலாம்.ஈராக் ஒரே நாடாகவாகவே இருக்குமா என்பதே சந்தேகமாகவே இருக்கிறது. இராக் மக்களுக்குத் தேவை இப்போது பொறுமையும் ,மறதியும் ,எதிர் காலத்தின் மேதான நம்பிக்கையுமே.


koothaadi@gmail.com

Series Navigation

கூத்தாடி

கூத்தாடி