புலம் பெயர் வாழ்வு (7) – தலைமுறை இடை….வெளி

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

இளைய அப்துல்லாஹ்


லண்டனில் ஒரு பிரபல்யமான கோவில் ஒன்றில் வைத்து ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்னிடம் கேட்டான் “சாதி என்றால் என்ன… ?” உண்மையில் சாதிபற்றி பொிய அறிவு என்னிடம் இல்லை. ஆனால் இளைஞர்களுக்கு பதில் சாியாகச் சொல்ல வேண்டும் என்ற கருத்து எனக்குண்டு.

“தொழில்களை வைத்து சாதிகளை பிாித்து விட்டார்கள் எமக்கு முந்தியவர்கள்” என்றேன்.

“ஏன் அப்படிச் செய்தார்கள்” என்று அவர் கேட்கும் போது என்னிடம் விடை இல்லை.

தனது வீட்டில் அம்மா சொன்னவ “ரூபன் வீட்டிலை சாப்பிடக்கூடாது அவை குறைஞ்சசாதி என்று” என அந்த மாணவன் சொல்லும் போது நான் அதிர்ச்சியடையவில்லை.

புலம்பெயர் நாடுகளில் சாதி பார்ப்பது அற்றுப்போய்விடவில்லை. பத்திாிகை விளம்பரங்களில் பார்க்கிறோம். சாதி பெயர் சொல்லி விளம்பரம் செய்திருப்பார்கள். திருமணம் முடிப்பது சுப காாியங்களுக்கு சொல்லுவது என்று தங்கள் தங்கள் சாதிக்குள் மட்டும் அழைப்பு விடுப்பது தொடர்கிறது.

அங்கு பிறந்தவர்களுக்கு சாதிகள் பற்றி தொியாத நிலையில் பெற்றோர்கள் அதனை வளர்த்துவிடப் பார்த்தாலும், பிள்ளைகள் சாதிதொடர்பாக அலட்டிக் கொள்வதில்லை.

பெற்றோர்ள் ஒரு நிலையும் பிள்ளைகள் ஒரு நிலையும் எடுக்கும் பொழுது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான பிறழ்வு தோன்றுகிறது. அதனை பின்னர் ஓட்டமுடியாமல் போய்விடுவதுண்டு பிள்ளைக்கு ஒவ்வாத விடயங்களைப் பெற்றோர்கள் சொல்லும் பொழுது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நேரடி பிளவு வந்துவிடுகிறது.

ஒரு நண்பாின் மகள் அவரது சாதி அல்லாத வேறு ஒரு சாதி காதலனை தொிவு செய்ததற்காக நண்பர் மகளை அடித்துவிட்டார். ஒரு சிறிது நேர ஆத்திரம் மகளை அவரைவிட்டு பிாித்துவிட்டது. மகளுக்கு வயது பதினெட்டு. அவள் தனியே சென்றுவிட்டாள். அம்மா அழுதபடி இருக்கிறா. மகள் இனிமேல் வீட்டுக்கே வரமாட்டாளாம்.

சாதிகள் தொடர்பான சர்ச்கை இந்தளவுக்கு போய்விட்டது புலம் பெயர் நாடுகளில் ஊாில் உள்ள சாதிகளின் பெயரால் சண்டையும் சில இடங்களில் நடந்ததுண்டு.

மூன்றாவது தலைமுறையில் வளர்ந்த ஒரு சமுதாயம் புலம் பெயர்நாடுகளில் வேரூன்றி விட்டதனைப் பார்க்கிறோம். அவர்கள் தமிழ்ப் பெயர்களில் உள்ள “ஆங்கிலம்” அல்லது “டொச்” அல்லது “டச்” அல்லது “பிரரெஞ்” இப்படி இன்னோரன்ன மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் எமது ஊர்க்கட்டுப்பாடுகள் என்று சொல்லப்படுபவை தொியாதவர்கள். இவர்களிடம் எதனையும் திணிக்க முடியாது. இவர்கள் தாமாக தொிந்து கொள்ளவிரும்புபவர்கள்.

ஒரு சமூக சேவகாின் மகள் சொன்னாள் அப்பா நான் திருமணம் முடிக்கப் போறவரது நடைமுறைகள் பழக்க வழக்கங்களை அவதானிக்க அவரோடு ஒரு வருடம் வாழ்ந்து பார்த்துவிட்டுத்தான் முடிவு சொல்வேன். எனக்கு பிடிக்கும் அல்லது பிடிக்காது.

அப்பா அதிர்ந்து போய் இருக்கிறார். இப்படியான வாழ்க்கை முறையோடு ஒன்றிப் போனால் ஒன்றுங்கள் அல்லது எங்களை விட்டு விடுங்கள் என்று முன்னாலேயே சொல்லிவிட்டு அவர்கள் போய்விடுவார்கள்.

இங்கு போல ஒரு அப்பா வேலை செய்து பணம் சம்பாதிக்க வீட்டில் பிள்ளைகள் இருந்து சாப்பிடுவது. செலவுக்கு அப்பாவை நம்பியிருப்பது என்பது இல்லை. ஒவ்வொருவரும் சுயமாக சம்பாதிக்கிறார்கள். செலவழிக்கிறார்கள். எவர் மீதும் எவரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

பெற்றோருக்கு பிள்ளைகளுக்குமான அவ நம்பிக்கை பல இடங்களில் வந்து விடுவதுண்டு. ஒன்று தான் கண்டிப்பான அப்பா என்பதைக் காட்டப்போக வேறு சில இடங்களில் பெற்றோருக்கு பிள்ளைகளுக்குமான மொழிப்பிரச்சினை.

அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அந்த நாட்டு மொழி தொியாமை அவர்களை புலம்பெயர் நாடுகளில் அந்நியப்படுத்தும் ஒரு முக்கயி காரணியாகும்.

லண்டனில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். அண்ணன், தங்கை இருவாின் குடும்பமும் சந்திக்கிறார்கள். அண்ணன் பிரான்ஸ் தங்கை லண்டன். இருவாின் பிள்ளைகளில் ஒருவருக்கு “பிரெஞ்” மட்டும் தொியும மற்றவருக்கு “ஆங்கிலம்” மட்டும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிாிக்கிறார்கள்.

உறவு முறையைச் சொல்லிக் கொள்ளக்கூட மொழி இல்லை. மெளனம்…

இந்தப் பிரச்சினை பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே தூரத்தை அதிகப்படுத்துகிறது. தாய்மொழி மீதான அக்கறையை வெளிப்படுத்தாததன் விளைவு இப்பொழுது நாம் அனுபவிக்கிறோம். வீட்டில் தமிழில் பேசுவது தொடர்பான எந்தக் காிசனையும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு தமிழே தொியாது. தான் வளரும் நாடுகளில் மொழியை உள்வாங்கிக் கொண்டு அதனூடே சிந்திக்கத் தொடங்கி விடுகிறார்கள். இதன்மூலம் தமிழ் அழிந்துவிடும்.

ஒரு பிரபலமான சிறுகதையாளர் நந்தினி சேவியர். அவர் சொன்னார் “தமிழ் மொழி பற்றி கவலைப்படத் தேவையில்லை நாங்கள் புள்ளைப்பெத்துக் கொண்டு தானே இருக்கிறோம் இங்கு”

இந்த உத்தரவாத்தை மீறின அச்சம் புலம் பெயர்நாடுகளைப் பார்க்கும் பொழுது இருக்கிறது. இங்கு ஒரு பிரபல்யமான பத்திாிகையாளாின் மனைவி சொன்னார் என்ரை மகன்மகளுக்கு தமிழ் பேசவராது. தேவையில்லை அதனை அவபெருமையாக நினைக்கிறா.

பத்திாிகையாளர்களும் வேற்றுமொழி மீதான வாஞ்சையில் அலட்டிக் கொள்கிறார்களில்லை. இந்த நிலையில் புலம் பெயர் நாடுகளில் இலக்கியம் மேல்வருமா ? நிலைத்து நிற்குமா என்ற கேள்விகள் வேறு எழுகின்றன. இருக்கும் தலை முறைக்கும் பின்பு தமிழை எழுத வாசிக்க யாருமே இருக்கமாட்டார்கள். இதில் தமிழ் இலக்கியம் எங்கே வளரப் போகிறது. என்ற கவலை புத்திஜீவிகள் மத்தியல் இருக்கிறது.

இந்த தலைமுறையினரால் தமது வேர் சமூகத்தோருடனான அந்நியோன்யம் அறவே இல்லாமல் போவதற்கான அபாயம் இருக்கிறது. புலம் பெயர் மொழிகளோடு பாிச்சயம் அற்ற இங்குள்ள உறவுகள் இங்குவரும் பேரப்பிள்ளையை அணைத்து ஆசையோடு முத்தமிடுவதோடு உறவு ஸ்தம்பித்து விடுகிறது.

அவர்களும் அதற்கு மேல் விரும்புகிறார்களில்லை. அண்மையில் வவுனியா கடுகதி ரயிலிலி ஒரு குடும்பத்தை சந்தித்தேன் அவர்கள் கனடாவில் இருந்து வந்தவர்கள். இரண்டு பெண்பிள்ளைகள் ஒருத்திக்கு பதினைந்து, மற்றவருக்கு பதினொன்று… ஆங்கிலம் மட்டும் தொியும் என்பதனை அப்பா பெருமையாகவே சொன்னார். அம்மா பிள்ளைகளுக்கு இங்குள்ள அசெளகாியங்களைச் சொன்னார். வுழடைநவ வசதியீனம், நுளம்பு, கரப்பான்பூச்சி, வாழ்க்கைமுறை, பாய், ஊத்தை என்று அடுக்கிக் கொண்டு போனா. இவைகளைப் பற்றி குறைகூற முடியாமல் இருக்கிறது. ஏனெனில் இங்கு வீடுகளில் உள்ள ஊர்வன பறப்பன எல்லாவற்றையும் வெளிநாடுகளில் ணுழழ வில் தான் போய்ப் பார்க்கவேண்டும்.

மொழி ஒரு பிரச்சனை என்றால் புலம்பெயர் நாடுகளில் உள்ள எமது பிள்ளைகளுக்கு இங்குள்ள வசதியீனங்கள் தொடர்பாகவும் சொல்லிக் கொடுக்க வேண்டும் ஒருமுறை இலங்கைக்கு வந்தவர்கள் பின்னர் வர தமது உறவுகளைப் பார்க்க வர விரும்பும்படி அவர்களின் மனதை பக்குவப்படுத்த வேண்டும்.

“அவன் இனிப் போகமாட்டான். அங்கு வசதியில்லை” என பெற்றோரே பிள்ளைகளை அப்படியாக்கி விடுகிறார்கள்.

வவுனியாவில் ஒரு சைவ உணவுக்கடையில் இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்பம் பிள்ளை குட்டிகளோடு வந்ததைப் பார்த்தேன். இப்பொழுது, அடிக்கடி கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் புலம்பெயர் நாடுகளில் இருந்துவரும் தமிழ்க்குடும்பங்களைச் சந்திக்கிறேன்.

அந்தப் பிள்ளைகள் உடுத்தியிருந்த ஆடைகள் பற்றி நண்பன் கவலைப்பட்டான். வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் பொழுது பெண்பிள்ளைகள் சல்வார் உடுத்தி வந்திருக்கலாமல்லவா என்று சொன்னான். இங்குள்ள உறவுகள் வயது வந்த பெண் பிள்ளைகளைப் பார்க்கும் பொழுது முகம் சுழிப்பார்கள். பின்னர் ஒதுக்கி விடுவார்கள். சமுதாயத்தோடு இவர்கள் ஒட்டமாட்டார்கள். நண்பனின் வாதம் சாி.

வெளிநாடுகளில் பார்க்க மாட்டார்கள் அது பற்றி அலட்டமாட்டார்கள். ஆனால், நாம் பிறந்த இடம் அல்லது வளர்ந்த இடம் ஒரு கலாசாரத் தன்மையை உள்வாங்கியுள்ளது. தமிழர் என்று ஒரு பெருமையான கலாசாரத்தைக் கொண்டிருக்கிறோம். அதுபற்றி பிள்ளைகளுக்கு சாியாக சொல்லிக் கொடுக்கும் போது அவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

ஆனால், பிடிவாதமாக இருக்கும் பொழுது அவர்கள் எங்களை அசட்டை செய்துவிடுவார்கள். மொழி பற்றிய இடைவெளியை நிரப்ப புலம் பெயர் பெற்றோரால் நிச்சயமாக முடியும் நான் பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன் வீட்டில் தமிழ் பேசுங்கள் என்று கட்டாயப்படுத்தும் பெற்றோரை. அந்த வீடுகளில் நன்றாக தமிழ் பேசுகிறார்கள் பிள்ளைகள். முடியாது என்பதல்ல பொியவர்கள் விரும்புகிறார்களில்லை.

பொதுவாகவே, புலம்பெயர் பெற்றோர்கள் பிள்ளைகளை நெருக்குவதனையே காண்கிறேன். பல விடயங்களில் இப்படித்தான். மற்றவாின் பிள்ளை யு ழூ (ஏ-ஸ்டார்) பாடத்தில் எடுத்துவிட்டானே. எனது பிள்ளை எடுக்கமாட்டானோ எனும் மன எக்களிப்பில் பிள்ளைகளைப் போட்டு படி படி…. என்று இரவு பகலாக நச்சாிக்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன். அநேகமான பிள்ளைகள் இதனால் மன நோயாளர்களாக இருக்கிறார்கள். தமக்கு முடியாத ஒன்றைச் செய்யத் திணிக்கிறார்கள் தமிழ் பெற்றோர்கள். அவர்களுக்கு பெருமை மட்டும் தான்.

இந்த விடயம் கல்வியில் மட்டுமல்ல பரதநாட்டியம், வீணை, வயலின், புல்லாங்குழல் பழகுதல் மற்றும் அரங்கேற்றுதல் என்ற விடயம் வரை பெருமைக்குக் கொண்டாடும் விடயமாக வளர்ந்துவிட்டது.

அவசர அவசரமாக பழகி ஒரு அரங்கேற்றம் செய்துவிட வேண்டும் என்ற பேரவா பெற்றோர் மத்தியில் இருக்கிறது. “என்ரை பிள்ளை வீணை செய்யுறா”இ “என்ரை பிள்ளைக்கு அரங்கேற்றம்” என்று சொல்லிப் பெருமைப்படுவதற்கு பிள்ளைகளின் நேரமின்மைக்குள் நேரத்தை எடுத்து அவர்களை பெரும் சிரமத்துக்குள்ளாக்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறேன்.

கணிதம், ஆங்கிலம், ஏனைய பாடங்கள் ாியூசன் அதற்குள் பரதநாட்டியம், தமிழ் வகுப்பு என்று முழுநாளும் பிள்ளைகளை கஷ்டப்படுத்துகிறார்கள்.

பரதநாட்டிய தொழிற்சாலைகளாக சிலர் இயங்கிவருவதனை கவலையோடு ஒரு பத்திாிகையாளர் மேடையில் சொன்னார். உண்மையில் கலைப்பயிற்சிகள் அக்கறையோடு செய்யப்படாமல் வெறும் புகழ் தேடுபவையாக இருக்கின்றன. எனக்குத் தொிந்த ஒரு பணக்காராின் பெண் மகள் வீணை அரங்கேற்றம் முடிந்து மூன்று வருடங்கள், அதற்குப்பிறகு அவள் அதனைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.

கலை ஆசிாியைகளும் தமது கலைத்துவத்துக்கு பதிலாக பணம் பண்ணும் நோக்கம் ஒன்றே குறியாக இருக்கின்றனர். பரதநாட்டியம் இதற்கு நல்ல உதாரணம். ஒரு ஆசிாியை எத்தனை பரநாட்டியங்களை அரங்கேற்றுகிறார் என்ற போட்டி நிலவுகிறது லண்டனில். அவர்கள் வசதியாக வாழ்ந்து வருகிறார்ள்.

எனக்குத் தொிந்த ஒரு பெண், இரவு பகலாக வேலைக்குப் போகிறாள் என்ன என்று விசாாித்த போது, ஒரு அரங்கேற்ற கசட்டைத் தந்து “அண்ணா இதனைப் பாருங்கள் அத்தோடு ஒளிபரப்புங்கள் இது எனது அரங்கேற்றம்” என்றாள்.

அவள் தனது நாட்டிய அரங்கேற்றத்துக்கு இந்தியாவில் இருந்து விருந்தினரை வரவழைத்தது. மேடைச் செலவு, ஆடைபட்ட வங்கிக் கடனை அடைப்பதற்கு இரவு பகலாக வேலை செய்கிறாள்.

அது பரதநாட்டியம் ஆகட்டும், வீணை, வயலின், மிருதங்கம் என்று கலைகளைப் பயின்று அதில் திாிபுறக் கற்று கற்றவர் முன்னிலையில் வைத்து தனது வித்தையைக் காட்டி குறைகளைக் கேட்டு மேலும் அக்கலை தொடர்பான அர்ப்பணிப்பில் ஈடுபட உதவுவதே “அரங்கேற்ற” முடிந்தவுடன் சலங்கையை அவிழ்த்து வைத்து விடுவார்கள். இது கலைகள் மீதான அவமதிப்பை உண்டாக்கும் செயலல்லவா. இதற்கு தமிழ் பெற்றோர் தான் காரணம்

“என்ரை பிள்ளை தமிழ் வகுப்புக்கு போகுது உன்ரை பிள்ளையும் போகுதோ” என்று பூராயம் தேடுவது இன்னொரு பெஷன். தமிழ் வகுப்புகள் அக்கறையின்மையால் வெற்றி பெறாமையைக் காண்கிறோம். சாியான பாடத்திட்டமின்மையையிட்டு ஒருமுறை அமுதுப்புலவர் கவலைப்பாட்டார்.

“அ” அம்மா “ஆ” ஆடு “உ” உரல் என்று பாடத்திட்டம் இருக்கும் போது ஊனா-உரல் பற்றி அங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைக்கு என்ன தொியும். இப்படியான சமூகத்திற்கு ஒவ்வாத உதாரணங்கள் மூலம் சில விடயங்களை உதாரணம் காட்டும் போது பிள்ளைகள் விழிக்கிறார்கள். உரலை ஆசிாியை கரும்பலகையில் வரைந்து காட்டுவா. பிள்ளைகளுக்கு விளங்காது. இந்த நிலையில் தமிழ் வகுப்புகள் புலம்பெயர்நாடுகளில் தரமில்லாமலும் விளக்கமில்லாமலும் இருக்கின்றன.

சில பிள்ளைகள் தமக்கு தொிந்த மொழிகளில் தமிழை எழுதிப்படிக்கும் பொழுது தமிழ் எழுத்துக்கள் மீதான பாிச்சயம் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால். பெற்றோாின் நச்சாிப்புக்காக பிள்ளைகள் தமிழ் வகுப்புகளுக்கு போகிறார்கள்.

ாியூஷன் சென்டர்கள் இப்பொழுது லண்டனில் ஒரு வாி செலுத்தப்படாத குடிசைக் கைத்தொழில்களாக வந்துவிட்டன என்று சட்டத்தரணி ரங்கன் சொன்னார்.. ாியூஷன் என்பது ஏன் என்ற கேள்வி போய் “என்ரை பிள்ளை ாியூஷன் போகுது உங்கடை பிள்ளை போகுதே” விசாாிப்பும் விடுப்புமாகிவிட்டது.

இங்கிருந்து வரும் பன்னிரண்டு, பதின்மூன்று வயதுப் பிள்ளைகளுக்கு மொழியறிவு போதாமையினால் ஆங்கில வகுப்புகளுக்கு பெற்றோர் அனுப்புகின்றனர். ஆனால் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளையும் பெற்றோர் ாியூஷனுக்கு அனுப்புகின்றனர்.

ஓய்வுபெற்ற ஆசிாியர்கள் இலகுவாக பணம் செய்யக்கூடிய இடமாக ாியூஷன் இருக்கிறது. இங்கிலாந்திலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் வியாபாரத்துக்கு கட்டாயம் வாி கட்ட வேண்டும். ஆனால், ாியூஷன் வாிகட்டப்படாமல் ஏமாற்றப்பட்டு வருகிறது. இப்படி வாி கட்டப்படாமல் சம்பாதிப்பது இங்கிலாந்தில் குற்றமாகும்.

பொதுவாக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவேளை புலம்பெயர் நாடுகளில் அதிகாித்துக் கொண்டே போகிறது. கலைகள் வெறும் பகட்டுக்கானவையாக ஆகிவிட்டன. மொழி அழிந்துகொண்டு போகிறது. “சாரங்கா” வின் “ருத்ரவீணை” சிறுகதையில் வரும் வெறுமை படர்ந்த என் விழிகளில் ஒரு கலாசார வெளிறலின் பிரதிநிதியாகத் தன்னுணர்வு இழந்து கொண்டிருக்கும் அந்தத் “தமிழ்ப்பெண் மிதந்து கொண்டிருந்தாள்” என்ற இறுதி வாக்கியம் சத்தியமானதே.

—-

anasnawas@yahoo.com

Series Navigation

இளைய அப்துல்லாஹ்

இளைய அப்துல்லாஹ்