புதிய பெயர், புதிய தோற்றம், புதிய குடும்பம் ஏன் ?

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

செழியன்


நாற்பத்தி எட்டு மணி நேரம் வேகமாக ஓடி வந்த களைப்பில் ஒரு பெரு மூச்செறிந்து நின்றது அந்த இரயில் வண்டி. பெட்டி, படுக்கைகளுடன் பிரயாணிகள் எல்லாம் ஒரு வேகத்துடன் இறங்கி நடந்தனர்.

ஒரு இரயில் பெட்டியில் இருந்து வயது 30 மதிக்கத்தக்க மனிதன் மட்டும் மிக மெதுவாக இறங்கினான். வெள்ளை நிறச் சட்டையும், கறுப்பு நிற கால்ச்சட்டையும், சப்பாத்தும் அணிந்திருந்தான். அவனைப் பார்ப்பதற்கு ஒரு மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவன் போல் இருந்தது. ஆனால் அவனுடைய முகத்தில் ஏதோ இனம் புரியாத குழப்பம் தெரிந்தது.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தவன் வெகு நேரமாக யோசித்தான். தன்னுடைய காற்சட்டைப்பையை துருவித் துருவி எதையோ தேடினான். அதற்குள் சில டொலர் நோட்டுகள் தான் இருந்தது. உதட்டைப் பிதுக்கிக் கொண்டான். அவன் குறிப்பாகத் தேடியது அவனுக்குக் கிடைக்கவில்லை என்று அவனுடைய முகம் கூறியது.

பின்னர் மிகுந்த யோசனையுடன் தெருவில் நடந்தான். பசிக்குமாப் போல் இருந்தது. ஒரு சிறிய உணவகத்திற்குள் சென்று உணவருந்தினான். தற்செயலாக அவனுடைய கண்களுக்கு ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ என்ற அறிவித்தல் தட்டுப்பட்டது.

சாப்பிட்டு முடித்து பில்லுக்குப் பணம் கொடுக்கும் போது அந்தப் பெண்மணியிடம், அந்த வேலைக்கு தான் விண்ணப்பிக்க விரும்புவதாகக் கூறினான்.

கிளாரா என்று தன்னை அறிமுகப்படுத்திய அந்தப் பெண் இவனுடைய பெயரைக் கேட்டாள். உடனே இவன் ஏனோ தடுமாறிப் போனாலும், சில கணங்களிலேயே சமாளித்துக் கொண்டு ஜோன் என்று கூறினான்.

“ஜோன் கொஞ்ச நேரம் தாமதியுங்கள். நான் உள்ளே சென்று இந்த உணவகத்தின் முதலாளியிடம் தெரிவிக்கின்றேன்.” கிளாரா கூறிவிட்டு உள்ளே சென்றாள்.

சில நிமிடங்களில் பருத்த, வயதான பெண்மணி ஜோனிடம் வந்தாள். ஜோனை நம்பிக்கை இல்லாமல் ஏறிட்டுப்பார்த்தவள், உள்ளே அழைத்துச் சென்றாள்.

இங்கு வேலை செய்ய விருப்பமா என்று அந்த உணவகத்தின் முதலாளி தமரா கேட்டாள். தனக்கு உடனடியாக வேலை வேண்டும் எந்த வேலையும் செய்யத்தயார் என்று ஜோன் கூறினான்.

விறகு கொத்தும் வேலைக்குத்தான் உடனடியாக ஆள் தேவை, அது கடினமான வேலை, ஆனால் நல்ல சம்பளம் தரப்படும் என்று தமரா கூறிய போது ஜோன் தனக்கு அதில் நல்ல அனுபவம் உள்ளது என்று கூறி அந்த வேலையைப் பெற்றுக் கொண்டான்.

உடனடியாக ஜோனை வேலை செய்யும் படி தமரா கூறினாள்.

வெகு உற்சாகமாக ஜோன் விறகுகளைக் கொத்திப் போட்டான்.

ஜோனின் வேலை தனக்குப் பிடித்துப் போய்விட்டதாக அன்று மாலை தமரா சந்தோசமாகக் கூறினாள்.

தங்குவதற்கு வேறு இடம் இல்லாத படிடயால், இரயில் நிலையத்தில் இரவு படுத்துத் தூங்கி விட்டுக் காலையில் வேலைக்கு வந்து விடுவான் ஜோன்.

ஒழுங்காக வேலை செய்தான் ஜோன். தன்னுடைய வேலை போக தமராவுக்கும் உணவு தயாரிக்க ஒத்தாசை செய்தான். கிளாராவுக்கும் ஜோனைப் பிடித்துப் போயிற்று.

சில தினங்களுக்குப் பின்னர் தங்குவதற்கு ஒரு புதிய இடம் தான் தேடுவதாக ஜோன் தமராவிடம் கூறினான்.

கிளாராவின் வீட்டில் வாடகைக்கு இருந்தவர் காலி செய்து கொண்டு போனபடியால் அந்த இடத்தை கேட்டுப்பார்க்கலாம் எனத் தமரா கூறினாள்.

கிளாராவும் தன்னுடைய வீட்டு அறையை ஜோனுக்கு வாடகைக்கு கொடுக்க சம்மதித்தாள்.

சில நாட்களிலேயே கிளாரா ஜோனுக்கு தன் மனதிலும் இடம் கொடுத்துவிட்டாள். ஜோனும் கிளாராவும் மனம் ஒத்த தம்பதியினாராக வாழத்தொடங்கினர்.

புல மாதங்கள் கழிந்தன.

ஒரு நாள் காலை நித்திரை விட்டு எழுந்த ஜோன் திடுக்கிட்டுப் போனான்.

நான் எங்கிருக்கின்றேன் ? எப்படி இங்கு வந்தேன் ? என்று அதிசயமாய்க் கேட்டான்

“ஏய் டார்லிங் ?… என்ன நடந்தது உனக்கு ?” என்று கிளாரா சிணுங்கினாள்.

“நீ யார் ?” என்று ஜோன் கிளாராவைக் கேட்டான்.

“ ஜோன் உனக்கு என்ன பைத்தியமா பிடித்து விட்டது ? நான் தான் உன்னுடைய மனைவி கிளாரா.” என்று கிளாரா கத்தினாள்.

“இல்லை. நான் ஜோன் இல்லை. என்னுடைய பெயர் றிச்சாட். என் மனைவியின் பெயர் சில்வானா, மகள் பெயர் செரின்.” என்று ஜோன் கூறினான்.

“நான் எப்படி இங்கு வந்தேன்.” என்று திரும்பத் திரும்ப கேட்டான்.

இவனுக்கு என்னவோ நடந்து விட்டது என்று கிளாரா அம்புலன்சை அழைத்தாள்.

ஜோனின் உடல், உள நிலைமை எல்லாமே சரியாகத்தான் இருந்தது. ஆனால் அவன் தன்னுடைய பெயரை ஜோன் இல்லை றிச்சாட் என்றும் தனக்கு கிளாரா, தமரா ஒருவரையும் தெரியாது என்று அடம்பிடித்தான். அவன் விறகு கொத்தும் வேலை செய்கின்றான் என்றதும், சிரித்தான். தான் ஒரு கம்பனியில் கணக்காளராக வேலை செய்வதாயும், விறகு கொத்துகின்ற கஸ்டமான வேலைகளை எல்லாம் தன்னால் செய்ய முடியாது என்று கூறினான்.

றிச்சாட்டின் விலாசத்தை பொலிசார் கேட்டபோது அந்த விலாசம் ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள இன்னொரு மாநிலத்தில் இருந்தது. இது எல்லோரையும் ஆச்சரியப்படவைத்தது.; றிச்சாட் திடுக்கிட்டான், ஆயிரம் கிலோ மீற்றரை எப்படித் தான் கடந்து வந்தேன் என்று.

பொலிசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். எல்லா உண்மைகளும் வெளிவந்தன.

றிச்சாட்டின் உண்மையான வசிப்பிடம் இன்னொரு மாநிலத்தில் இருந்தது. றிச்சாட் தனது கம்பனியில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மனைவியும், மகளும் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் இருப்பதாக செய்தி வந்தது. அதிர்ச்சியடைந்த றிச்சாட் அவர்களைப் பார்ப்பதற்கு புறப்பட்டான். அதன் பின்னர் எங்கே என்று தெரியாமல் காணாமல் போய்விட்டான். பின்னர் இப்போ இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

எப்படி இங்கு வந்தேன் ? இந்தப் புதிய இடத்தில் என்னென்ன செய்தேன் என்பது எதுவும் றிச்சாட்டுக்கு இப்போ நினைவுக்கு வரவில்லை.

றிச்சாட்டுக்கு என்ன நடந்தது ?

றிச்சாட்டுக்கு வந்தது னுளைளழஉயைவைஎந குரபரந என்ற எதிர்பாராத விதமாக திடாரென ஏற்படுகின்ற ஒரு நிலையாகும். . இதை ிளலஉாழபநெைஉ கரபரந என்றும் அழைப்பார்கள். மிக அபூர்வமாகவே இது ஏற்படுகின்றது.

இவர்கள் திடாரென வீட்டை விட்டு ஓடிப்போய்விடுவார்கள். பெரும்பாலும் தமது சொந்த இடத்தை விட்டு பல நூறு கிலோ மீற்றர்கள் பிரயாணம் செய்வார்கள். இவர்களின் மூளையில் பழைய நினைவுகள் எதுவும் இருக்காது. தமது, பெயர், ஊர், மனைவி, குழந்தைகள், பெற்றோர்,உறவினர் என்று எந்த விபரமும் இவர்களின் நினைவுக்கு வராது.

புதிய இடத்தில் தமக்கு ஒரு புதிய பெயரை வைத்துக்கொண்டு, புதிய வேலையைத் தேடிக்கொண்டு வாழ்வார்கள். சமயத்தில் புதுக் குடும்பம் கூட இவர்களுக்கு அமைந்து விடும்.

பழைய விடயங்கள் எல்லாம் மறந்து விட்டது என்றால் இவர்களுடை மொழி ஆற்றலும் மறந்து போக, மறுபடியும் அ,ஆ, இஸ என்றா இவர்கள் படிப்பை ஆரம்பிக்க வேண்டுமே ? என்ற ஒரு நியாயமான கேள்வி உங்களுக்கு வரலாம்.

இதில் ஆச்சரியம் என்ன வென்றால் இவர்களுடைய மொழி ஆற்றல் எதுவும் மறந்து போகாது. எத்தனை மொழி தெரிந்திருந்தாலும் அது அவர்களுக்கு தொடர்ந்து பேசவோ, எழுதவோ, வாசிக்கவோ வரும்.

புதிய இடத்தில் இவர்கள் தமக்கு புதிய அடையாளங்களையும் வைத்துக் கொள்வார்கள். தமது பழையதோற்றம் கூட இவர்களுக்கு சில நேரம் பிடிக்காது. முன்பு மீசை வைத்திருந்தவர், ‘என்ன இது முகத்தில் காட்டுச் செடி மாதிரி ஒன்று’ என்று அதை முற்றாக வழித்தெறிந்து விடலாம்.

சேலையே கட்டி வாழ்ந்த பெண் ‘இது சரியான பட்டிக்காடு’ என்று தூக்கிப் போட்டுவிட்டு நவநாகரீக உடைக்குத் தாவி விடலாம்.

இந்த குரபரந நிலைமையில் உள்ளவரை பார்த்து அவருக்கு இந்த குரபரந இருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியாது. காரணம் பழைய நினைவுகள் அழிந்து போனதை விட வேறு எந்த குறைபாடும் இவர்களுக்கு இருக்காது. சாதாரண மனிதர்களைப் போலவே இருப்பார்கள், செயற்படுவார்கள்.

இந்த குரபரந நிலைமை சில மணி நேரம், சில நாட்கள், சில வாரங்கள், அல்லது சில மாதங்களுக்கும் நீடித்திருக்கக் கூடியது.

யுத்தங்கள் நிகழும் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, விபத்தில் சிக்கிக் கொண்டவர்களுக்கு, இயற்கை அழிவுகளுக்குள் அகப்படுபவர்களுக்கு, அல்லது தனிப்பட்ட முறையில் பெரும் கவலைக்கு உள்ளாகின்றவர்களுக்கு இந்த குரபரந நிலைமை ஏற்படுகின்றது.

திடாரென ஒரு நாள் இவர்களுக்கு இந்த குரபரந நிலைமை போய் பழையன எல்லாமே நினைவுக்கு வந்துவிடும். ஆனால் துரதிஸ்ட வசமாக குரபரந நிலையின் போது நடந்தது எதுவும் இவர்களுக்கு நினைவுக்கு வராது. அதை நினைவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாலும், அந்த நாட்களில் நடந்த சம்பவங்களின் விளைவுகளும் இவர்களுக்கு மனச் சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

கில்லாடிக் கிரிமினல்கள் கொலைகள், பாலியல் வல்லுறவுகளைச் செய்து விட்டு குரபரந நிலையிலே தாம் இதைச் செய்ததாக கூறிச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமா ?

கனேடிய நீதி மன்றம் இப்படியான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது. மனோதத்துவ நிபுணர்கள் கில்லாடிக்கு கில்லாடிகள். அவர்களின் கண்களில் மண்ணைத் தூவுவது சரியான கஸ்டம். இந்த கிரிமினல்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துவிட்டுத்தான் அவர்கள் ஓய்ந்தார்கள்.

—-

chelian@rogers.com

Series Navigation

செழியன்

செழியன்