செலாவணியாகாத நாணயங்களைத் திரும்பப் பெறுகிறேன்

This entry is part [part not set] of 46 in the series 20060217_Issue

மலர்மன்னன்


எதிர்பார்த்ததுதான், இறுதி முயற்சியாக நான் பொய் பேசுகிறவன் என்று சொல்லி எனது பதிவுகளைப் புறந்தள்ளுதல். இது மிகவும் எளிதான முறைதான்; எவராலும் இதனைக் கடைப்பிடிக்க இயலும்.

சென்னையில் தமிழ் மையம் என்ற அமைப்பின் சார்பில் சுந்தர ராமசாமியின் நினைவாக ஒரு கூட்டம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. பேசியவர்களில் ஞானக்கூத்தனும் ஒருவர். அவர் சொன்னார்:

‘என் வயதினருக்கு இப்பொழுது உள்ள பிரச்சினை எங்களுக்கு முந்தைய தலைமுறையினரும் சம காலத்தவரும் ஒவ்வொருவராக மறைந்து வருகிறார்கள். ‘

இது எவ்வளவு பெரிய பிரச்சினை என்பது இப்போது புரிகிறது. முதலாவதாக எனது காலத்தையும் எனது அனுபவங்களையும் நான் பதிவு செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பிறருக்குத் தோன்றியது எதனால் ?

கடந்த நாற்பது-ஐம்பது ஆண்டுகளில் குறிப்பாகத் தமிழ்நாட்டின் அரசியல், கலை, சமூகம் பத்திரிகைத் துறை, இலக்கியம் ஆகியவை தொடர்பான பல நிகழ்வுகளுக்கு நான் சந்தர்ப்ப சாட்சியாய் இருக்கும் வாய்ப்பினைப்பெற்றுள்ளேன் என்பதல்லாமல் வேறென்ன ?

நான் ஏதேனுமொரு அலுவலகத்தில் ஏதேனுமொரு உத்தியோகத்தில் இருந்துவிட்டு, நானுண்டு, என் குடும்பம் உண்டு என்று காலத்தை ஓட்டியிிருந்தால் இந்த அளவுக்கு என்னிடம் எதிர்பார்ப்பு இராது அல்லவா ?

மாதச் சம்பளத்தையே கருத்தில் கொண்டு ஒரு பத்திரிகையில் பணி செய்திருந்தால் கூட அந்தப் பணிக்கே உரிய இயல்பின்ி பிரகாரம் பல பொதுவான நிகழ்வுகள் குறித்துக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும். எனக்கு அதைவிடவும்ி கூடுதலாகவே தகவல்கள் தெரியுமாறு வாழ்க்கை அமைந்தது. ஆனால் இவற்றை நான் பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட பலரும் இன்றைக்கு இல்லாது போய்விட்டார்கள். நான் சொல்வது சரிதான் என்று சாட்சியம் அளிக்க அவர்கள் வர மாட்டார்கள். ஆகவே விருப்பம்போல் எதனை வேண்டுமானாலும் பதிவு செய்ய நான் முற்படக் கூடும்தான். இதனை உத்தேசித்தும்தான் ஒரேஒரு வாசகர் சொன்னாலும் போதும், எழுதுவதை நிறுத்திக் கொள்வதாய்ிமுன்னரே சொன்னேன். அந்த ஒரு வாசகராய் நண்பர் கற்பக வினாயகம் அமைந்துவிட்ட

தில் மிக்க மகிழ்ச்சி. எனது பதிவுகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகுமேயானால் அவ்வாறான பதிவுகளுக்கு அவசியமில்லை என்பதோடு அவை திசைதிருப்புவனவும் ஆகும் ஆதலால் அவை பதிவு செய்யப்படாமலே போவதுதான் நல்லது.

எஞ்சியுள்ள எனது வாழ்நாளின் அவகாசத்தை நான் மிகவும் பயனுள்ள வழிகளில் செலவழித்தாக வேண்டும். சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு பழங் கதைகள் பேச எனக்கு அவகாசம் இல்லை. அவசர அவசரமாக நான் சில பணிகளை முடித்தாக வேண்டும். எனவேதான் நண்பர் கற்பக வினாயகம் காசிக்கு ரயிலேற எனக்கு ஆலோசனை சொல்லியும் அதனை ஏற்கவியலாதவன் ஆனேன். மேலும் ஒரு பாரத தரிசனமாக எனது காசி யாத்திரை பாத யாத்திரையாக இருக்குமேயன்றி வேறு மார்க்கங்களாக அல்ல.

மதியழகனின் தம்பி கே. ஏ. கிருஷ்ணசாமியின் மனைவி பிப்ரவரி 11 அன்று பகல் இறந்துவிட்டார். நான் பல ஆண்டுகளுக்கு முன் மிகவும் நெருங்கிப் பழகிய குடும்பம். ஆகவே கே.ஏ.கே. வீட்டிற்குச் சென்றிருந்தபோது, ‘இவர் மதியின் கண்டுபிடிப்பு; எங்கள் குடும்ப உறுப்பினர் ‘ என்று அவர் மற்றவர்களிடம் என்னைப் பற்றிக் கூறிி அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. அதையொட்டி அண்ணாவுடன் எனக்கு இருந்த அண்மையையும் நினைவுகூர வேண்டியதாயிற்று. அந்த அளவுக்குத் தலைமுறைகள் தாண்டி வந்துவிட்டிருக்கிறேன். இன்று அரசியலில் எஞ்சியுள்ள மூத்த தலைமுறையினர் தவிர எவரோடும் எனக்குப் பரிச்சயம் இல்லை. எனவே எனது பதிவுகள் சரிதான் என்று சாட்சியம் சொல்ல எவரும் வரமாட்டார்கள். ‘உங்களுக்கு வயதாகிக் கொண்டு போகிறது. எப்போது வேண்டுமானாலும் நீங்கள் காலமாகிவிடக் கூடும். நான் நீங்களும் சம்பந்ிதப்பட்ட, அல்லது உங்களுக்கும் தெரிந்த இன்ன மாதிரி ஒரு நிகழ்வைப் பதிவு செய்திருக்கிறேன். ஆகையால் நீங்கள் இப்போதே இது சரிதான் என்று சான்றளிக்க வேண்டும ‘ என்று எவரையும் நான் அழைப்பது இங்கிதமல்ல. இந்நிலையில் எனது பதிவுகள் செல்லத்தக்கவை அல்ல எனப் புரிந்துகொள்கிறேன். அவற்றைப் பதிவு செய்தல் வீண் வேலைதான். வீண் வேலையில் இறங்க எனக்கு அவகாசம் இல்லை. மேலும் செல்லாத நோட்டுகள் யாருக்கு வேண்டும் ?

‘மலர்மன்னன் பொய்யாய் சுந்தர ராமசாமி வீட்டில் தங்கியதாய் கதை அளக்கிறார். காலமாகி விட்டவரிடம் சென்று ஆதாரம் கேட்கமுடியாது என்ற தைரியத்தில். சு.ரா.வின் பெயரைச் சொல்லி இவ்வாறு போலிப் பெருமை கொண்டாடுவதுதான் இப்போது பேஷன் போலும் ‘ ‘ என்று நண்பர் கற்பக விநாயகம் எழுதுகிறார்.

முதலில் எனக்கும் சு.ரா.வுக்கும் இடையிலான தொடர்பு அடிக்கடி நேரிலோ வேறு வழிகளிலோ பேசிப் பழகவில்லையாயினும் நாற்பது ஆண்டுகளுக்கும் முற்பட்டதுதான். கடைசியாக நான் அவரை சென்னையில் அசோகமித்திரன் 50 ஆண்டு எழுத்து நிறைவு

நிகழ்ச்சியின்போது சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். எப்போது சந்தித்தாலும் எனது கரங்களை இறுகப் பற்றிக்கொள்வார். ஸ்பரிச பாஷையில் அவர் உரையாடுவதாய்ப் புரிந்து கொள்வேன். அந்தச் சந்திப்பே இறுதிச் சந்திப்பாகிவிடும் என்று எதிர்பார்க்கவில்லை.

சுந்தர ராமசாமி மட்டுமல்ல, அவருடைய தாய் மாமன் நாராயணன் என்னும் பரந்தாமனுடனும் கூட நாங்கள் இருவரும் சேர்ந்து பணிசெய்தவர்கள் என்கிற முறையில் தினசரி பழகும் அளவுக்கு எனக்குப் பரிச்சயம் இருந்தது. இதனை உறுதி செய்ய இப்போது அவர் இல்லைதான். ஆனால் இதனை உறுதி செய்யச் சிலர் இருக்கிறார்கள.

சுந்தர ராமசாமியும் இப்போது நம்மிடையே இல்லாது போனது நமது துரதிர்ஷ்டம்தான். எனக்கு சாட்சியம் சொல்வதற்காக அல்ல. மேலும் மேலும் அவரிடமிருந்து கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும், சுவையான சம்பாஷணைகளும் பெறும் வாய்ப்பு இல்லாமற் போயிற்றே என்றுதான். ஏனெனில் அன்று சுந்தர ராமசாமி வீட்டில் என் மடி மீதிருந்து வாசலில் கொட்டியிருந்த மணலில் தாவுவதை அன்றாட விளையாட்டாகக் கொண்டிருந்த கன்ணன் இப்போது இருக்கிறார். கன்ணனின் அம்மாவும் இருக்கிறார், மண்டைக் காடு சம்பவத்தின்போது நான் அவர்களின் வீட்டில் தங்கியிருந்ததை உறுதி செய்ய. தமிழினி வசந்த குமார் போன்றவர்களும் இருக்கிறார்கள், நான் அவர் வீட்டில் தங்கியிருந்ததைப் பார்த்ததாகச் சொல்வதற்கு!

இரு ஆண்டுகளுக்கு முன் காலச் சுவடு திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் நடத்திய ஒரு கூட்டத்திற்கு நான் போயிருந்தேன். பெண் கவிஞர்களின் குரலை அடக்கும் முயற்சியைக் கண்டிக்கும் கூட்டம் அது என்பதால்தான். எனது பணிகள் பலவற்றுள் பெண்

உரிமை, பெண்டிர் நலம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதும் ஒன்றாகிப் போனது. இதனை உறுதி செய்ய பெங்களூரில் விமோசனாவின் டோனா பெர்னாண்டஸ் என்கிற சினேகிதி இருக்கிறாள், நல்ல வேளையாக!

காலச் சுவடு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கடைசி வரிசையில் ஓர் ஓரமாக உட்கார்ந்ிதிருந்துவிட்டுக் கூட்டம் முடிந்ததுமே கூட்டத்தோடு கூட்டமாக எழுந்து சென்றுவிட்டேன். நான் வந்திருப்பதை பிரபஞ்சன் பார்த்துவிட்டு அதனை கண்ணனிடம் சொன்னாராம். ‘எங்கே, எங்கே, என்று கண்ிணன் தேடினார், அதற்குள் நீங்கள் போய்விட்டார்கள் ‘ என்று பிற்பாடு ஒருமுறை பிரபஞ்சன் என்னிடம் சொன்னார். அந்த அளவுக்கு என்னைப் பற்றிக் கண்ணனுக்கு நினைவு இருக்க வேண்டுமெனில், அவரது பிள்ளைப் பிராயத்தில் அவரோடு விளையாடும் அளவுக்கு அவர்களின் வீட்டில் தங்கியிருக்கிறேன் என்பதன்றி நான் ஒன்றும் பெரிய பிரமுகன் என்பதாலல்லவே! இன்றுபோலவே அன்றும் நான் மிகச் சாதாரணமானவன்ிதான்.

சு.ரா. வின் பெயரைச் சொல்லி போலிப் பெருமை கொண்டாடுவதில் என்ன பேஷன் இருக்க முடியும் என்பது எனக்குப் புரியாத விஷயம். ஏனெனில் முதலில் அவர் என் நண்பர். பிறகுதான் மற்றதெல்லாம். நண்ிபராக இருந்ததால்தான் வெளியாவதற்கு முன்பே ஜே ஜே சில குறிப்புகளின் தொடக்க அத்தியாயங்களை கால் முதல் இதழிலேயே பிரசுரம்செய்ய அனுப்பினார். நீண்ட கால நட்பு இல்லாவிடில் அதிக பட்சம் ஒரு கதை அல்லது கட்டுரைதான் எழுதி அனுப்பியிருப்பார். நானும் ஒரு எழுத்தாளன் என்பதால்

சொல்கிறேன்: பரிச்சயம் இல்லாத ஒருவர் புதிதாக ஒரு பத்திரிகை தொடங்குவதாகத் தெரிவித்து அதற்கு எழுதுமாறு கேட்டால் அந்தப் பத்திரிகையின் தரம் எவ்வாறு இருக்ிகும் என்று தெரியாத நிலையில் எந்த எழுத்தாளரும் எழுதமாட்டார். கால் முதல் இதழுக்கு எழுதியவர்கள் வெங்கட் சாமிநாதன், முத்துசாமி, கந்தசாமி, பிரபஞ்சன், ஞானக்கூத்தன் எனப் பலரும் எனக்கு நண்பர்கள்தான் முதலில். பிறகுதான் அவர்கள் மீதுள்ள பட்டுப் பீதாம்பரங்கள் எல்லாம். அத்தகைய பட்டுப் பீதாம்பரங்களுடன் மட்டுமே அவர்களைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் ஒருவேளை அவர்கள் வீட்டில் தங்குவதாகக் கூறுவதும் அவர்களோடு நின்று படம் பிடித்துக் கொள்வதும் பேஷனாகத் தோன்றக் கூடும்.

இன்று அகில பாரத பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர்களுள் ஒருவராக நியமனம் ஆகியுள்ள இல. கணேசன் பற்றிய குறிப்பையும் கற்பக வினாயகம் கட்டுரையில் கண்டேன். கணேசன் கூட சுமார் முப்பது ஆண்டுகளுக்ிகு முன்பாகவே அறிமுகமானவர்

தான். இன்று எங்களிடையே அடிக்கடி சந்தித்துக்கொள்ளும் அளவுக்கு நெருக்கம் உள்ளது. பல சமயங்களில் அவரோடு சேர்ந்தே செல்கிறேன். அவருக்கு இப்போதுள்ள பிம்பம் காரணமாக அவரோடு சேர்ந்து செல்வதும், நெருக்கமாகப் பழகுவதும் புதிதாகப்

பாரக்கிறவர்களுக்கு வேண்டுமானால் பேஷனாகத் தோன்றலாம். எனக்கு எப்படி அவ்வாறான உணர்வு ஏற்படும் ?

ஆறாண்டுக் காலம் மத்தியிலே பொறுப்பில் இருந்த பா.ஜ.க. தலைமையிலமைந்த ஆட்சியின் தலைமகனிலிருந்து பலரும் அவர்கள் பதவிக்கு வருமுன்பிருந்தே அறிமுகமானவர்கள்தான். பேஷன் கருதியோ பயன் கருதியோ அவர்களைத் தேடிப் போனதில்லை!

இதையே ஒரு முடிவுரையாய் அமைத்துத் திண்ணை வாசகர்களுக்கு வந்தனம் சொல்ல விரும்புகிறேன். கடந்த சில வாரங்களாகத் திண்ணையின் பக்கங்களை வீணடித்தமைக்காக மன்னிக்ிக வேண்டுகிறேன்.

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்