வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

அமெரிக்க உளவுத் துறை


(அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. வங்கதேசப் போரின் போது டிசம்பர் 71-ல் அமெரிக்கக் கப்பல் படைப் பிரிவு இந்து மகா சமுத்திரத்திற்கு வந்த்போது , யுத்தம் தீவிரமடைந்து விரிவு பெறும் என்ற அச்சம் ஏற்பட்டது. அச்சமயம் அமெரிக்கவின் இந்திய தூதுவர் அமெரிக்க உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய தந்தி இது. )

1. இன்று வரையில் நான் அமெரிக்க நிலைபாடு , இங்குள்ள சச்சரவுகளை மட்டுப் படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டது என்று எல்லோரிடமும் நியாயப் படுத்திக் கொண்டிருக்க முடிந்தது. ஆனால் இந்து மகாசமுத்திரத்தில் அமெரிக்கக் கப்பல் படைப் பிரிவு நுழைந்தது இந்தப் போரைத் தீவிரப்படுத்தும் முயற்சி என்றே இங்குள்ள மற்ற தூதுவரக அதிகாரிகள் கருதுகிறார்கள்.

2. கனடாவின் ஹைகமிஷனர் ஜார்ஜ் இது பற்றித் தீவிரமாய்க் கருத்துத் தெரிவித்துள்ளார். கப்பற்படைப்பிரிவு வருகை, யாஹ்யாவிற்கு போரைத் தீவிரப்படுத்த ஊக்கம் அளிக்கும் செயல் என்றே ஜார்ஜ் கருதுகிறார். (மேற்கு வங்கத்தின்) ஃபர்மான் அலியின் எச்சரிக்கையையும், கவர்னர் மாலிக் அனுப்பிய செய்தியையும் யாஹ்யா உதாசீனம் செய்யக் காரணமாய் இருந்தது , அமெரிக்காவின் கப்பல் படை வருகையே என்று ஜார்ஜ் கருதுகிறார்.

3. கப்பற்படை வருகை வல்லரசுகளின் ஈடுபாட்டைக் காண்பிக்கும் செய்கையாகும் என்று ஜார்ஜ் கருதுகிறார். இதனால் சீனா, ரஷ்யா இரண்டு நாடுகளுமே பதட்டம் கொள்ளும், அவர்கள் இந்தப் போரில் பங்குபெறுவதன் தீவிரம் அதிகரிக்கும்.

4. ஜார்ஜ் கனடாவின் பிரதமர் ட்ரூடோவிற்கு இதையே தான் எழுதப் போவதாகவும், ஜனாதிபதியுடன் பேசுமாறு கேட்டுகொள்வதாகவும் தெரிவித்தார்.

5. இந்த நிகழ்வு பற்றி நான், மற்றவர்களிடம் ஆதரவாய்ப் பேசவேண்டும் என்றால் இந்தச் செயலுக்கு என்ன அவசியம் என்பதை மிக விரிவாக எனக்குத் தெரிவிக்கவும்.

கீட்டிங்

(தூதுவர்)

Series Navigation

அமெரிக்க உளவுத் துறை

அமெரிக்க உளவுத் துறை