ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை

This entry is part of 51 in the series 20041118_Issue

சுந்தர ராமசாமி


ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். காஞ்சி பீடாதிபதி ஒரு சமயத் தலைவர் அல்ல என்றும் அவர் இன்று இந்தியாவில் பொதுவாகக் காணக்கிடைக்கும் கீழ்நிலை அரசியல்வாதிகளில் ஒருவர்தான் என்றும் நான் கொண்டிருக்கும் கருத்துக்களை என் வாசகர்களுடன் ஏற்கனவே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். ஜெயேந்திரர் குற்றம் செய்திருப்பார் என்றே நான் சந்தேகப்படுகிறேன். அவர் மீதான வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு நடைபெறாது போவதற்கான தூண்டுகோல்கள் அகில இந்திய அளவில் வலுவாக இருக்கின்றன. ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் நம் சமூகத்தில் அரசியல், வணிகம், சமயம், இதழியல், திரைத்தொழில், கல்வித்துறை ஆகிய பல்வேறு மட்டங்களைச் சார்ந்தவர்களில் குற்றவாளிகள் மிகுதியாக இருப்பதோடு தமிழ் அரசியலையும் தமிழ்க் கல ‘ச்சாரத்தையும் அவர்கள்தான் இன்று தீர்மானிக்கிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.

ஜெயேந்திரரின் கைது போன்ற ஒரு முக்கியமான செயல்பாடு நம் சமூகத்தில் நடக்கிறபோது அதுபற்றி எந்த அபிப்பிராயமும் கூறாமல் எழுத்தாளர்கள் மெளனம் சாதிப்பது வியப்பை அளிக்கிறது. அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளஞ்ப்படையாகப் பதிவு செய்யவேண்டும். மேலும் ஜெயேந்திரர் மீதான நீதிமன்ற விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதை வற்புறுத்த வேண்டிய சூழல் உருவாகி வந்தால் அந்தக் குறிக்கோளை முன்வைத்து எழுத்தாளர்கள் போராட வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

நாகர்கோவில் சுந்தர ராமசாமி

15.11.04

Series Navigation