இது எப்படி இருக்கு…. ?

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

வரதன்


1996- தமிழமே கொந்தளித்துப் போயிருந்தது – ஜெயலலிதாவின் ஆட்சி முறையால்.

அப்போது மூப்பனார் எடுத்த முடிவு, சோவின் முயற்சி ஆகியவையால், மாற்றம் வந்தது.

ஆனால் அறுவடையை திமுக சாமர்த்தியமாக செய்தது.

ரஜினி கூட ‘ இதுவரை நீங்க பார்த்த கருணாநிதி வேறு இனிப் பார்க்கப் போகும் கருணாநிதி வேறு ‘ என்று சொல்லித்தான் ஓட்டு கேட்டார்.

பின் வந்த தேர்தலில் திமுக-வின் அடாவடி தாங்க முடியாமல் மூப்பனார் அதிமுக அணி கண்டார்.

அப்போது முதல் ரஜினி கருணாநிதியுடன் தன்னை அடையாளம் கண்டார்.

ஆனால், ரஜினி இப்போது.. ?

அதிமுக-விற்கு வாக்களிக்கப் போகிறார்.

இதில் ரஜினியின் மனநிலை மாற்றக் காரணங்களை விட கருணாநிதியின் மாறா குணநலம் பற்றி நாம் புரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதாவின் உதானினப்படுத்தும் தன்மையினால் அனைவரும் கருணாநிதியை சகித்து சில காலம் இருந்து பின் தாங்க முடியாமல் நொந்து போகின்றனர்.

இதற்கு ரஜினியும் விதி விலக்கல்ல.

ரஜினியின் ஆதரவு அதிமுக – பாஜக அணிக்கு என்று அறிவிப்பு வந்தவுடன், கோவையில் நடந்த பேட்டியில் கருணாநிதி, ‘….நான் திருப்பி அடித்தால் தாங்க மாட்டார்கள் ‘ என்று ரஜினியைத் தாக்கினார்.

அவர் சொல்லால் அடித்த அடி, நிச்சயம் ரஜினிக்கு கருணாநிதியின் குணம் புரிந்திருக்கும்.

இனியாவது ரஜினி தெளிவாக முடிவெடுத்து அரசியலில் இறங்க வேண்டும். இல்லை இந்தக் கருணாநிதி – ஜெயலலிதா விட்டால் மாற்று இல்லாத நிலைத் தொடரும்.

2006- தேர்தலுக்கு இப்பாதிருந்தே ரஜினி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்கள் இணைந்து, முதல்வராக முதிர்ந்த தியாக சீலரும் சுயநலம் இல்லாத , மக்கள் பிரச்சனையில் நல்ல சிந்தனையுள்ள எம்.எஸ்.உதயமூர்த்தி போன்றவர்களை அறிவித்து களம் காண தயாராக வேண்டும்.

தயவு செய்து கருணாநிதியிடம் தவறிய கணிப்பை சிதம்பரம் விஷயத்திலும் தொடரக்கூடாது. சிதம்பரம் ‘தொழில் துறை ‘ அல்லது ‘பொருளாதாரத் துறை ‘ அமைச்சராக வரலாம்.

இப்பாதிருந்தே ரஜினி, 234 தொகுதிகளுக்கும், அறிவார்ந்த- சமுக சேவை மனப்பான்மையுள்ள நபர்களை அடையாளம் காண வேண்டும்.

அதை விடுத்து பா.ஜ.க பாணியில் கடைசி நிமிஷத்தில், அடுத்த கட்சி களவானிகளை வேட்பாளராக்கினால் துயரம் வேறு உருவத்தில் தான் தொடரும்.

செய்வாரா ரஜினி…. ?

—-

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்