‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ ஒரு சிறுகதையும், அது குறித்த புரிதலுக்காக குறிப்புகளும்

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

ரவி கே ஸ்ரீநிவாஸ்


‘ஓமெல்லாசை விட்டு போகிறவர்கள் ‘ உருஸ்லா கே லெ குய்ன் எழுதிய புகழ் பெற்ற கதை. இக்கதையைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரைக்கு வழிவகுக்கவே இக்குறிப்புகள்.விரிவான கட்டுரை எழுத நேரம் இல்லாததால் இக்குறிப்புகள் சான்றுகளுடன் தரப்படுகின்றன.கதையும் இணையத்தில் உள்ளது. வாசகர்கள் கதையினை நன்கு புரிந்து கொள்ள இவை உதவும் என நம்புகிறேன்.

1, வில்லியம் ஜேம்ஸின் நூல் ஒன்றிலிருந்து இதன் கரு க்ிடைத்ததாக உருஸ்லா குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இக்கதையின் கருத்தினை வில்லியம் ஜேம்ஸின் நூலில் கூறப்பட்டுள்ள கருத்துடன் தொடர்புபடுத்திக்காண வேண்டும். உளப்புனைவு(psychomyth) என தன் கதையினை உருஸ்லா கூறுகிறார்.வில்லியம் ஜேம்ஸ் எழுதுகிறார்

‘one could not accept a happiness shared with millions if the condition of that happiness were the suffering of one lonely soul. ‘ (1). எனவே இக்கதை முன்வைக்கும் பிரச்சினை அறம் சார்ந்த ஒன்று.

2, இக்கதை பல கல்லூரிகள்,பல்கலைகழகங்களில் அறம்,தத்துவம்,இலக்கியமும் அறமும்/தார்மீகம், வணிக அறம்,தொழில்நுட்பமும் அறமும்,உயிரிய அறம்(bioethics) போன்றவற்றை கற்பிக்கும் போது பயன்படுத்தப்படுகிறது.இது தவிர உயர் நிலைப்பள்ளி/கல்லூரி ஆங்கில/இலக்கிய பாடநூல்களில் இடம் பெற்றுள்ளது. இணையத்தில் இதற்கான சான்றுகளைக் காணலாம்

3,இக்கதை பயன்பாட்டுவாதம் (utilitarianism),அறம்-நீதி குறித்த கேள்விகளை எழுப்புகிறது. ஒருவரின் துயரம் ஒட்டுமொத்த சமுகத்திற்கும் பலன் தரும் என்றால் அது ஏற்கத்தக்கதா என்ற கேள்வியும், ஒட்டுமொத்த சமூகத்தின் நலனுக்காக அது சரி என்ற பயன்பாட்டுவாதக் கண்ணோட்டம் ஏன் அவ்வாறு கருதுகிறது என்ற கேள்வியும் நம் முன் எழுகினறன.(2)

4, இக்கதையுடன் ஒப்பிடப்படும் லாட்டரி என்ற கதையில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சமூகத்தின் வன்முறைக்கு இலக்காகிறார்.ஆனால் இரண்டு கதைகளுக்குமிடையே வேறுபாடுகள் பல. இக்கதை குறித்து பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். (3)

(5) இக்கதையை மோசமான வேலைச்சூழல், குறைந்த ஊதியம் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு தேவை என்ற கருத்துடன் ஒப்பிட்டு பார்க்குமாறு யோசனை கூறப்பட்டுள்ளது. எனவே அறம்,நீதி, சமூக மேம்பாடு குறித்த கேள்விகளை எழுப்பவும் இக்கதை பயன்படுத்தப்படுகிறது(4)

(6)கரமசோவ் சகோதர்கள் என்ற நாவலின் ஒரு பகுதியை இக்கதையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.இது குறித்து உருஸ்லாவே குறிப்பிட்டுள்ளார்(5).ஆகவே வாசகர்கள் அந்தப்பகுதியைப் படித்துவிட்டு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

(7) இக்கதையை அவரது பிற எழுத்துக்கள், குறிப்பாக கற்பனையுலக சித்தரிப்புகளுடன் தொடர்பு படுத்திக் காணவேண்டும்.அவரது படைப்புகளில் புனைவு(myth) என்பதும். கதை என்பதும் மனிதர்கள் தங்களைத்தாங்கள் புரிந்துகொள்ள தேவையானவை.(6)

(8) இக்கதை குறித்து ஒரு ஆய்வாளர் எழுதும் போது தெரிவு என்பது இங்கு கேள்வியாக எழுப்படுகிறது என்கிறார்.மொழிபெயர்க்காமல் ஆங்கிலத்தில் அதனைத் தருகிறேன்.(7). வாசகர்கள் இதை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாஸ்டிய பேரம் என அவர் குறிப்பது எது என்பதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும்.

(9)அறிவியல் புனைகதைக் குறித்தும்,archetypes,mythology பற்றி உருஸ்லா விரிவாக எழுதியுள்ளார். அவரது கட்டுரை ஒன்றில் அவர் எழுதுகிறார்

‘Such myths , symbols,images do not disappear under the scrutiny of the intellect, nor does an ethical, or aesthetic, or even religious examination of them make them shrink and vanish.On the contrary: the more you look, the more there they are.And the more you think, the more they mean. On this level, science fiction deserves the title of a modern mythology ‘ ( P 206)(8)

இக்கதை ஒரு உளவியல் கோட்பாட்டின் நீட்சியாக இல்லை. மாறாக இங்கு குழந்தை ஒரு குறீயீடு, ஒரு கற்பனைஉலகமும், மனிதத்துயரமும் குறித்த பல கேள்விகளை நம்முன் எழுப்ப இக்குறியீட்டை அவர் முன்வைக்கிறார்.

(10), அவரது கற்பனைஉலகில் பாத்திரங்கள் அவற்றுக்கு வருகை தரும் வெளிநபர்கள் அல்ல, பிரஜைகள். அவரது பிற படைப்புகளில் UTOPIA,DYSTOPIA எப்படி சித்திரிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் ஆராயவேண்டும்.(9)

(11) Fritz Lang இயக்கிய The Metropolis என்ற படத்தையும், triage என்ற கருத்தையும் இக்கதையுடன் சேர்த்து விவாதிக்கபட வேண்டியவை.triage பற்றி ஷிவ் விஸ்வநாதன் எழுதியதை இங்கு நினைவு கூறுகிறேன்(10).

எனினும் வாசகர்கள் triage குறித்து புரிந்து கொள்ள அவரது நூலைத்தான் படிக்க வேண்டும் என நான் கூறவில்லை. social triage குறித்து அவர் எழுதுகிறார். triage என்பதே அறம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது. போரின் போது காயமடைந்த வீரர்கள் ஒருபுறம், குறைவான அளவில் உள்ள மருந்துகள், குறிப்பாக antibiotics.இதில் எந்த உயிரைக்காப்பது, யாருக்கு மருந்து கொடுப்பதில் முன்னுரிமை தருவது என்பது குறித்த தீர்வுமுறைதான் triage.விபச்சார விடுதிக்கு சென்றதால் பால் வினைக்குள்ளான படை வீரர் மருந்து கொடுத்தால் ஒரிரு நாட்களில் போர்முனைக்கு செல்லமுடியும் என்பதால் அவர் முன்னுரிமை பெறுவார்.போரில் காயமுற்று சிகிச்சை கொடுத்தாலும் போருக்கு செல்ல முடியாத வீரர் முன்னுரிமை பெறமாட்டார்.

மேற்கண்ட குறிப்புகள் இக்கதையின் பரிமாணங்களை காட்ட உதவும் என்று நம்புகிறேன்.

எனவே இந்தக் கதையில் அறிவியல் பயன்படுத்தப்பட்டுள்ளது. நவீன கலாச்சாரமே குழந்தைப்பருவம் மீது செலுத்தப்ப்டும் வன்முறையின் மீது கட்டப்பட்டது என்ற கருத்து ஃப்ராய்ட் முதல் ழாக் லக்கான் வரை பிரபலமாக உள்ள ஒன்று. அக்கருத்தின் மறு ஆக்கமே இக்கதை.ஆனால் இதை நாம் அறிவியல் புனைகதைகளின் வரிசையில்சேர்க்கக் கூடாது. இதில் அறிவியல் ரீதியான ஊகம் இல்லை. அறிவியலின் தரிசன தளம் பரிசீலிக்கப்படவும் இல்லை. இது கவித்துவக் குறியீடுதான். (11) என்பது ஏற்க இயலாத விளக்கம்.இது கதைக்கு எந்த வித்திலும் பொருந்தாத வாசிப்பும் கூட. இது புரிந்து கொள்ள முயல்வர்களையும் குழப்படையச் செய்யும் விளக்கம்.

(*) Ursula LeGuin The Ones Who Walk Away From Omelas

In: The wind ‘s twelve quarters. NY; Harper & Row Publishers, 1975: 275-284

1) http://www.wvup.edu/mberdine/102LaGuin.htm

(2)http://www.ksu.edu/english/baker/english320/sg-LeGuin-OWWAfO.htm http://web.mit.edu/jrising/www/justice1.2.pdf

(3)http://www.feministsf.org/femsf/listserv/feministsf/weeklylogs/1997/log9705a.txt

(4)http://www-rohan.sdsu.edu/faculty/dunnweb/mgt722.disc-06.19.2002.html

(5) http://www.hopkins.edu/academics/english/Lit2001/Omelas.html

(6) ‘For the story … is one of the basic tools invented by the mind of man, for the purpose of gaining understanding ‘ – cited in Communities of the Heart : The Rhoteric of Myth in the Fiction of Ursula K.Le Guin -Waren G.Rochelle-Liverpool University Press-2001

(7)Waren G.Rochelle op.cit P 100 ‘She presents in this story an idyllic paradise , a society without want and restraint, with total freedom. Yet there is a price for utopia : the abused child in the cellar, who must remain there or paradise will fall.For Omelans there is the knowledge of the child and the faustian bargain it represents, and, then, there is the choice: to stay, to accept, or to leave. To make the choice becomes rhetorical: choose a paradise that is literally rotten at the base, or choose true freedom, with responsibility and compassion. The dialectic is thus set in motion: here,then, are things as they are, and here are things as they might be.Choose ‘

(8) Good and Bad Mythmaking – Urusula K.Le Guin in Science Fiction -J.G.Cunningham (ed)-Greenhaven Press 2002, This article was published in 1976.

(9) See Understanding Ursula K.Le Guin Elizabeth Cummins University of South Carolina Press 1990 and Waren G.Rochelle op.cit

(10) A Carnival For Science-p 32-39-Shiv Visvanathan-Oxford university press-1997 p 32-39 ஞுட நு¡மநு

(11) சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் ஜெயமோகன் http://www.thinnai.com/ar0615033.html

ravisrinivas@rediffmail.com

Series Navigation

ரவி கே ஸ்ரீநிவாஸ்

ரவி கே ஸ்ரீநிவாஸ்